[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

கிரிக்கெட் விளையாட்டின் போது உயிரிழந்த 24 வயது இளைஞர்

24-year-old-player-dies-after-suffering-a-heart-attack-during-a-cricket-match-in-mumbai

மும்பையில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது நெஞ்சுவலி காரணமாக 24 வயது இளைஞர் உயிரிழந்தார்

மும்பையின் தானே பகுதியைச் சேர்ந்தவர் வைபவ் கேசர்கார். 24 வயதான வைபவ், கிரிக்கெட் போட்டிகளில் ஆர்வம் உடையவர். குடும்பச்சூழல் காரணமாக உள்ளூர் போட்டிகளில் விளையாடி பணம் ஈட்டி வந்துள்ளார். இந்நிலையில் பந்தப் பகுதியில் நடந்த டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டியின் போது வைபவ் விளையாடியுள்ளார். 

பீல்டிங் செய்து கொண்டிருந்த வைபவுக்கு கடுமையாக தோள்பட்டை வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மைதானத்தின் வெளியே ஓய்வு எடுத்துள்ளார். வலி அதிகமாகவே அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். வைபவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

24 வயது இளைஞர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்த சம்பவம்  அவரின் குடும்பத்தினரையும், நண்பர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவர்கள், இளைஞர்களின் இன்றைய வாழ்க்கை முறை ஆரோக்யம் இல்லாமல் இருப்பதே இது மாதிரியான இளம் வயது நெஞ்சுவலிக்கு காரணமாகிறது.

மன அழுத்தம், உடற்பயிற்சி இல்லாமை, சத்தான உணவு உட்கொள்ளாதது, சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் இருப்பது, ஓய்வு இல்லாமல் உழைப்பது போன்ற காரணங்கள் தான் இதய நோய்க்கு காரணமாக உள்ளது. அனைவரும் உடல்நலத்தில் கவனம் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close