[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட 4 அதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்

rajya-sabha-election-4-admk-candidate-petition

மாநிலங்களவைத்‌ தேர்தலில் போட்டியிட அதிமுக வேட்பாளர்கள் 4 பேரும் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் நவநீதிகிருஷ்ணன், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியன், கன்னியாகுமரி மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் விஜயகுமார் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.

தமிழக சட்டப்பேரவைச் செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ஜமாலுதீனிடம் அவர்கள் மனுக்களை அளித்தனர். தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கு வரும் 11ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ். பாரதி ஆகியோர் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு‌தாக்கல் செய்துள்ள 6‌ பேரும், போட்டியின்றித் தேர்வாக வாய்ப்புள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close