[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

ராஜஸ்தானில் 23 அமைச்சர்கள் பதவியேற்பு

swearing-in-of-ministers-of-newly-formed-rajasthan-government

ராஜஸ்தான் மாநிலத்தில், 13 கேபினட் அமைச்சர்கள், 10 துணை அமைச்சர்கள் என 23 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக அசோக் கெலாட்டும் துணை முதலமைச்சராக சச்சின் பைலட்டும் கடந்த 17 ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். ஜெய்ப்பூரில் நடந்த விழாவில் இவர்களுக்கு ராஜஸ்தான் ஆளு நர் கல்யாண் சிங் பதவி பிரமானம் செய்து வைத்தார். அப்போது அமைச்சர்கள் யாரும் பதவி ஏற்கவில்லை.

இவ் விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா, ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி, கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா, புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி, திமுக தலைவர் மு.க ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த மல்லிகார்ஜுன் கார்கே, முன்னாள் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், அமைச்சர்களை தேர்வு செய்ய முதலமைச்சர் அசோக் கெலாட்டும் துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டும் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் 23 புதிய அமைச்சர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தனர். 

இந்நிலையில் புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்றனர். ஜெய்ப்பூர் ராஜ்பவனில் அமைச்சர்ளுக்கு ஆளுநர் கல் யாண் சிங் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புலாக்கி தாஸ் கல்லா, சாந்திகுமார் தாரிவால், பிரசாதிலால் மீனா உட்பட 13 பேர் கேபினட் அமைச்சர்களாகவும் 10 பேர் துணை அமைச்சர்களாகவும் பதவியேற்றுக் கொண்டனர். இதில் ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியை சேர்ந்த சுபாஷ் கார்க்கும் அமைச்சராக பதவியேற்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close