[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

ஒடிஷா முதல்வரை சந்தித்தார் சந்திரசேகர ராவ்

chandrasekara-rao-met-odisha-chiefminister-naveen-pat-nayak

காங்கிரஸ், பாரதிய ஜனதாவுக்கு மாற்றாக மூன்றாம் அணியை உருவாக்க 4 நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ள தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்து ஆதரவு கோரினார்.

5 மாநில தேர்தலில் பாஜகவை வெற்றி கண்ட காங்கிரஸ் நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய அரசை எதிர்கொள்ள மெகா கூட்டணியை அமைத்து வருகிறது.

இதனிடையே பாஜகவிலும் காங்கிரஸிலும் சேராமல் மூன்றாம் அணியை உருவாக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முயன்று வருகிறார். இதற்காக சில மாதங்களுக்கு முன்பு திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். ஆனால் திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது.

இந்நிலையில்,  மூன்றாம் அணியை உருவாக்க 4 நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ள தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்து ஆதரவு கோரினார்.

முன்னதாக தனி விமானம் மூலம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு குடும்பத்துடன் சென்ற அவர், ராஜஷியாமளா தேவி மற்றும் சாரதா பீதம் கோயில்களில் சிறப்பு தரிசனம் செய்தார். 

இதை தொடர்ந்து கோனார்க் மற்றும் ஜெகன்னாத் கோயில்களில் தரிசனம் மேற்கொள்ள அவர், நாளை மேற்குவங்க முதல்வர் மம்தாவையும் சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளார். 

கொல்கத்தாவில் உள்ள காளிமாதா கோயிலில் தரிசனம் செய்த பின், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர்கள் மாயாவதி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரையும் சந்தித்து ஆதரவு கோர உள்ளார். தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் மத்திய அமைச்சர்களையும் சந்தித்து தெலங்கானா மாநிலத்தின் நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்து சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close