[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

தலா 17 தொகுதிகளில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் போட்டி

bjp-nitish-kumar-and-paswans-announce-bihar-deal-after-weeks-of-turmoil

வரும் மக்களவைத் தேர்தலில் பீகார் மாநிலத்தில் பாரதிய ஜனதா மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் தலா 17 தொகுதிகளில் போட்டியிடும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பீகார் மாநிலத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்த கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷா, பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதிஷ் குமார், மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்திய பின்ன‌ர் கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்தனர். 

பீகாரில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பாரதிய ஜனதாவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் தலா 17 தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 தொகுதிகள் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர, ஏதேனும் ஒரு பகுதியில் இருந்து ராம்விலாஸ் பாஸ்வான், மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மூன்று கட்சிகளும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாரதிய ஜனதாக கட்சி கூட்டணியில் இல்லாத நிலையில் தற்போது அக்கட்சி மீண்டும் இணைந்திருக்கிறது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close