ஆஸ்திரேலியாவின் உயரமான மலை சிகரத்தில் ஏறி தெலங்கானாவைச் சேர்ந்த 8 வயது சிறுவன் சாதனைப் படைத்துள் ளான்.
ஐதராபாத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவன் சமன்யு பொத்துராஜ். இவன் சிறுவயதிலேயே மலைச்சிகரங்களில் ஏறி வருகிறான். அவனது அம்மா லாவண்யா, மற்றும் பயிற்சியாளர்களுடன் பெரிய மலைகளில் ஏறி சாதனை படைத்துவருகிறான். கடந்த ஏப்ரல் மாதம் ஆப்பிரிக்காவின் உயர்ந்த மலைச் சிகரமான கிளிமன்ஜாரோவில் ஏறி சாதனை படைத்தான்.
தான்சானியாவில் உள்ள இந்த மலை சிகரம் கடல் மட்டத்தில் இருந்து 5,895 அடி உயரம் கொண்டது. இங்கு இந்தியக் கொடி யை பறக்கவிட்டு சாதனை படைத்த சமன்யு, அடுத்து ஆஸ்திரேலியாவின் மிக உயரமான மலையான கொஸ்கியஸ்கோ வுக்குச் செல்ல இருப்பதாகக் கூறியிருந்தான். அதன்படி இப்போது அந்த மலையில் ஏறி சாதனைப் படைத்துள்ளான்.
அவனுடன் அவனது அம்மா லாவண்யா, சகோதரி உட்பட 5 பேருடன் சென்ற சிறுவன் சிறுவயதில் இந்த மலையில் ஏறி, கடந்த 12 ஆம் தேதி சாதனை படைத்துள்ளான். பின்னர் சமன்யு கூறும்போது, ‘’இதுவரை நான்கு மலைசிகரங்களில் ஏறி இருக் கிறேன். அடுத்து 3,776 மீட்டர் உயரம் உள்ள ஜப்பானின் புஜி மலையில் ஏற முடிவு செய்துள்ளேன். நான் வளர்ந்த பின், விமா னப்படை அதிகாரியாக ஆக வேண்டும் என்பது விருப்பம்’’ என்றான்.
சிறுவனின் அம்மா லாவண்யா கூறும்போது, ‘’ஒவ்வொரு முறையும் ஏதாவது நோக்கத்தோடு மலை ஏறுகிறான். இந்த முறை கைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக ஏறியுள்ளான்’’ என்றார்.
“குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்” - 5 மாநில அரசுகள் போர்க்கொடி
50 நாட்களை நிறைவு செய்த ‘பிகில்’, ’கைதி’ - ரசிகர்களுக்கு இயக்குநர் நன்றி
சாய்ந்த 50 ஆண்டுகள் பழமையான மரம் - மீண்டும் அழகாக நட்டு வைத்த அதிகாரிகள்
பாலியல் வன்கொடுமைக்கு 21 நாட்களுக்குள் தூக்கு - ஆந்திர பேரவையில் நிறைவேறியது திஷா மசோதா
அசாம் போராட்டத்தால் ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை ஒத்திவைப்பு?