[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

நாட்டின் சிறந்த காவல்நிலையங்கள் பட்டியலில் இடம் பிடித்த பெரியகுளம் காவல் நிலையம்..!

periyakulam-police-station-in-the-list-of-best-police-stations-in-the-country

2018-ஆம் ஆண்டிற்கான நாட்டின் சிறந்த காவல் நிலையங்கள் பட்டியலில் தேனி பெரியகுளம் காவல் நிலையம் 8-வது இடத்தை பிடித்துள்ளது.

2016-ம் ஆண்டு முதல் நாட்டின் தலை சிறந்த 10 காவல் நிலையங்களை தேர்வு செய்து மத்திய அரசு விருது வழங்கி வருகிறது. குற்றங்களை கண்டறிதல், குற்ற தடுப்பு நடவடிக்கைகள், சட்டம் ஒழுங்கை பாதுகாத்தல், போன்ற பல்வேறு பணிகளை கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த விருதை வழங்கி வருகிறது.

கடந்த 2017-ம் ஆண்டில் 10 போலீஸ் நிலையங்கள் சிறந்த போலீஸ் நிலையங்களாக தேர்வு செய்யப்பட்டன. அதில், கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையம் நாட்டிலேயே சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு விருதை பெற்றது.

இந்நிலையில் 2018-ம் ஆண்டுக்கான நாட்டின் சிறந்த காவல் நிலையங்களில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த காலு காவல்நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கான பட்டியலை, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். அதன்படி அந்தமான் நிகோபாரில் உள்ள பே காவல் நிலையம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. பீகார் மாநிலம் ஃபரகக்கில் உள்ள காவல்நிலையம் மூன்றாவது இடத்தையும் புதுச்சேரி நெட்டப்பாக்கம் காவல்நிலையம் 4-ம் இடத்தையும் பிடித்துள்ளன.

கர்நாடகா மாநிலம் குடரி பகுதியில் உள்ள காவல் நிலையம் 5வது இடத்தையும் இமாச்சல பிரதேசம் மாநிலத்தின் சோபல் காவல் நிலையம் 6-வது இடத்தையும் பிடித்துள்ளன. 

ராஜஸ்தான் மாநிலத்தின் லக்ஹரி காவல் நிலையம் 7-வது இடத்தையும் தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் நிலையம் 8-வது இடத்தையும் பிடித்துள்ளன. 9-வது இடத்தில் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள முனிசிரி காவல் நிலையமும் 10-வது இடத்தில் கோவா மாநிலத்தின் சர்ச்சோரம் பகுதியில் உள்ள காவல் நிலையமும் உள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close