[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

ராஜஸ்தான் புதிய முதலமைச்சர் யார்? இன்று அறிவிக்கிறார் ராகுல்காந்தி!

rahul-gandhi-will-anounce-rajasthan-cm-today

ராஜஸ்தான் மாநில புதிய முதலமைச்சர் யார் என்பதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று அறிவிக்கிறார். 

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது. அந்தந்த மாநிலங்களில் ஆட்சியமைக்கும் தீவிரத்தில் அந்த கட்சி உள்ளது. 

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் சச்சின் பைலட் அல்லது முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆகியோரில் ஒருவர், முதலமைச்சராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதற்காக இருவரும் இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

(அசோக் கெலாட்)

முன்னதாக காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள், முதல்வர் தேர்வு தொடர்பாக ஜெய்ப்பூரில் நேற்று ஆலோசனை நடத்தினர். அக்கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பதால், சச்சின் பைலட்டும், அசோக் கெலாட்டும் ராகுலை சந்திக்க இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றனர். 

இந்த சந்திப்புக்கு பிறகு ராஜஸ்தான் மாநில புதிய முதலமைச்சர் யார் என்பதை ராகுல் காந்தி அறிவிப்பார் என அசோக் கெலாட் தெரிவித்து ள்ளார். 

ராஜஸ்தானில் காங்கிரஸ் 99 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான ராஷ்ட்ரிய லோக் தளம் ஒரு இடத்திலும் வென்றன. 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பகுஜன் சமாஜ் கட்சியும் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close