[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

பாஜகவை வீழ்த்த வியூகம்... டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம்..!

opposition-party-leaders-meet-today

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், ஆளும் பாரதிய ஜனதாவை வீழ்த்த வியூகம் அமைப்பது தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக ஆகிய கட்சிகள் பங்கேற்கின்றன. திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஆம் ஆத்மி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளன. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தெலுங்கு தேசத் தலைவர் சந்திரபாபு நாயுடு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

இடதுசாரி தலைவர்கள் யெச்சூரி, சுதாகர் ரெட்டி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், சரத் யாதவ், லாலுவின் மகன் தேஜஸ்வி பிரசாத் ஆகியோரும் டெல்லி கூட்டத்தில் பங்கேற்க இருக்கின்றனர். எனினும், பிஜு ஜனதா தளத் தலைவரும் ஒடிசா முதல்வருமான நவீன் பட்நாயக், தெலங்கானா முதல்வரும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் தலைவருமான சந்திரசேகர ராவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிய வந்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை எதிர்கொண்டு வெற்றி பெற வியூகம் அமைப்பது தொடர்பாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் விரிவாக ஆலோசனை நடத்த உள்ளனர். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான பணிகள் இந்தக் கூட்டத்தின் மூலம் விறுவிறுப்படையத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close