[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS பொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு
  • BREAKING-NEWS ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு
  • BREAKING-NEWS அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்

இணையத்தில் தேடப்படும் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் !

facts-about-new-chief-economic-adviser-krishnamurthy-subramanian

மத்திய அரசின் புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் குறித்து பலரும் இணையத்தில் தேடி வருகின்றனர். 

பாஜக அரசு பொறுப்பேற்றவுடன், நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக அரவிந்த் சுப்பிரமணியம் 2014-ம் ஆண்டு  நியமிக்கப்பட்டார். கடந்த 2017-ம் ஆண்டே இவரின் பதவி முடிந்த நிலையிலும் அவருக்கு ஒரு ஆண்டு பதவிநீட்டிப்பு வழங்கப்பட்டது. ஆனால் முன்கூட்டியே ஜூன் மாதம் பதவி விலகினார். இந்நிலையில் புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் குறித்து பலரும் இணையத்தில் தேடி வருகின்றனர். சென்னையில் பிறந்த கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் ஐஐடி கான்பூரில் மின்னியல் மற்றும் மின்னணு பொறியியல் துறையில் பிடெக் பட்டமும், கொல்கத்தா ஐஐஎம்-இல் எம்பிஏ பட்டமும் பெற்றவர். அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள பூத் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் முனைவர் பட்டம் பெற்றவர். மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜனின் மாணவரான இவர், 2015ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வில் பங்கேற்றிருந்தார். 

கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்தான் இந்தியாவில் மிகச் சிறிய வயதில் தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்படும் முதல் நபர். நிதித் துறை, பெருநிறுவன ஆளுகை மற்றும் பொருளாதார கொள்கைகள் வகுப்பதில் சிறந்த அனுபவம் கொண்ட இவர், அத்துறைகள் சார்ந்து பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். பல்வேறு சர்வதேசப் பத்திரிகைகளில் இவரது ஆய்வுகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் உள்ள ஜேபி மோர்கன் நிறுவனத்தில் கன்சல்டண்டாகவும், ஐசிஐசிஐ ஆராய்ச்சி குழுமத்தில் பகுதி நேர ஆய்வாளராகவும் பணியாற்றியுள்ளார். 

தற்போது இந்தியாவின் முன்னணி வணிகக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஹைதராபாத் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராகக் கிருஷ்ணமூர்த்தி பதவியில் நீடிக்கவுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close