[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை மூலம் சர்வாதிகார முறையில் தேர்தல் நடத்த அரசு முயன்றுள்ளது - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கு மறைமுகமாக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது - கே.எஸ்.அழகிரி
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் என்பது சட்டத்திற்கு உட்பட்டதே; மறைமுகத் தேர்தலுக்கு அவசரச் சட்டம் பிறப்பித்தது வியூகம் என்பது அல்ல - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS எங்களுடைய செயல்பாட்டை ஏற்றுக்கொண்டு பாஜக கூட்டணிக்கு ரஜினியும், கமலும் வரலாம் - பொன்.ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்தது தமிழக அரசு
  • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யபப்டுவதும் இந்தாண்டு அதிகரித்துள்ளது - வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு சோனியா காந்தி ஒப்புதல் எனத் தகவல்

சாலையில் கிடந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்.. அதிகாரிகள் சஸ்பெண்ட்..!

ballot-unit-was-found-lying-on-road-in-rajasthan

ராஜஸ்தானில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சாலையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இரண்டு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தானில் சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 11-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிப் பெற்று ஆட்சியமைக்க வாய்ப்பு இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இந்நிலையில் ராஜஸ்தானில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒன்று சாலையில் கிடந்த சம்பவம் வாக்களித்த வாக்காளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய காலங்களில் வாக்களிக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களே பயன்படுத்தப்படுகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட் என இரண்டு பகுதிகள் இருக்கும். பேலட் யூனிட்டில் தான் வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்வார்கள். வாக்குப்பதிவிற்கு பின் பேலட் யூனிட் ஒன்று, ராஜஸ்தான் மாநிலத்தின் பாரான் மாவட்டத்தில் உள்ள ஷகாபாத் பகுதியில் உள்ள சாலையில் கிடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அலட்சியத்துடன் செயல்பட்ட இரண்டு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே மத்தியப் பிரதேசம் மாநிலம் சாகரில் வாக்குப்பதிவு முடிந்த பின்பும் இயந்திரங்களை சரியான நேரத்தில் ஒப்படைக்காமல் இரண்டு நாட்கள் தாமதப்படுத்திய அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருந்தது. தற்போது ராஜஸ்தானில் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சாலையில் கிடந்தது மக்களை மட்டுமில்லாமல் தேர்தல் ஆணையத்திற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close