[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

மும்பையில் பிரபல தாதாவின் தமிழ் கூட்டாளி கொடூரக் கொலை!

mumbai-underworld-henchman-dk-rao-s-close-aide-murdered

மும்பையில் பிரபல தாதா டி.கே.ராவின் நெருங்கிய கூட்டாளியும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

மும்பை, சயான் கோலிவாடா பகுதியில் உள்ள சூர்யநிவாஸ் என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வந்தவர் மாரிமுத்து பெரியசாமி என்கிற டி.பி.ராஜா (40). நாமக்கல் மாவட்டம் ஊஞ்சனையை சேர்ந்த இவர், மும்பை தாதா டி.கே.ராவின் நெருங்கிய கூட்டாளி. இவர் மீதும் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. நவி மும்பையில் நடந்த பிரபல வங்கி கொள்ளையிலும் தொடர்புடையவர். போலீஸ்காரர் ஒருவரை கொன்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இவர், முன்று வருடத்துக்கு முன்தான் வெளியே வந்தார்.


எப்போதும் கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்து செல்லும் ராஜா, எதிர்கோஷ்டியினர் தனது உயிருக்கு குறி வைத்துள்ளனர் என்பதை கடந்த சில மாதங்களுக்கு முன் அறிந்துள்ளார். இதனால் குடும்பத்தினருடன் இருப்பதை தவிர்த்து, தனியாக வசித்து வந்துள்ளார். தன்னுடன் தனது ஆட்களை பாதுகாப்புக்காக எப்போதும் தயாராக வைத்திருப்பாராம்.

இந்நிலையில் வீட்டில் அவர் தனியாக இருப்பதை தெரிந்துகொண்ட இரண்டு பேர், நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் அவர் வீட்டுக்குள் நுழைந் தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் டி.பி.ராஜாவின் கழுத்தில் சரமாரியாகக் குத்தினர். அவர், உதவிக்கு ஆட்களை அழைக்க முயன் றார். அதற்குள் கழுத்து முழுவதுமாக வெட்டுபட்டு விட்டதால் சத்தம் போட முடியவில்லை. 

(டிகே ராவ்)

இதையடுத்து காரியத்தை முடித்துக்கொண்ட அவர்கள் ரத்தக் கறையுடன் தப்பியோடினர். அதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் டி.பி.ராஜா, சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இதுபற்றி போலீசார் கூறும்போது, ‘கொலையாளிகள், ராஜாவின் கழுத்தில் கிடந்த நகைகளை அப்படியே விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். அதனால் இது பழிவாங்குவதற்காக நடந்த கொலையா, அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரித்து வருகிறோம். அருகில் உள்ள சிசிடிவி கேமராவை பரிசோதித்து கொலையாளிகள் பற்றி விசாரணை நடத்துகிறோம். ராஜாவுக்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். அவர்கள் எங்கு வசிக்கிறார்கள் என்பதையும் விசாரிக்கிறோம்’ என்றனர். 

இந்த கொலை சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close