[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
  • BREAKING-NEWS ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி புகார் மனு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தெர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம்

புலந்த்ஷர் போலீஸ் அதிகாரி கொலையில் ராணுவ வீரர் மீது சந்தேகம்

soldier-seen-in-videos-key-suspect-in-up-cop-killing-sources

புலந்த்ஷர் வன்முறையில் போலீஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் ராணுவ வீரர் ஒருவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றின் வனப்பகுதியில் 25 பசுக்கள் இறந்த நிலையில் கிடந்ததாக தகவல் வெளியானது. இதனையடுத்து, சட்டவிரோதமாக பசு வதைக் கூடம் செயல்படுவதாக் கூறி கிராமத்திற்குள் ஒன்று திரண்ட வலதுசாரி அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீஸ்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

              

திடீரென அப்பகுதியில் உள்ள சிலர், போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அதோடு, காவல் நிலையத்திற்கும் சென்று அவர்கள் தாக்குதல் நடத்தினர். போலீஸ் நிலையத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததை அடுத்து, வன்முறையை கட்டுப்படுத்த தடியடி நடத்தினர். துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது.

            

இந்த வன்முறையில் சுபோத் குமார் சிங் என்ற போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். இளைஞர் ஒருவரும் கொல்லப்பட்டார். போலீஸ் அதிகாரி சுபோத் குமார் சிங் பேராட்டக்காரர்களின் கல்லெறித் தாக்குதலில் உயிரிழந்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால் அவர் மீது வன்முறையின் போது துப்பாக்கிச் சூடு நடத்தியது தெரியவந்தது. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

           

புலந்த்ஷர் வன்முறை சம்பவம் தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுபோத் குமார் சிங்கை சுட்டுக் கொன்றிருக்கலாம் என்று இதுவரை பேசப்பட்டது. இந்நிலையில், சுபோத் குமார் சிங் கொலையில் ராணுவ வீரர் ஒருவர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வன்முறை தொடர்பாக வெளியான வீடியோ பதிவில் ஜித்து பவுஜி என்ற ராணுவ வீரர் இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. 

வன்முறை தொடர்பான வீடியோ பதிவுகளில் தன்னுடைய மகனை பார்க்கவில்லை என்று அவரது தாயார் கூறியுள்ளார். இருப்பினும், வன்முறை நடந்த இடத்தில் ஜித்து இருந்ததாக அவரது உறவினர் ஒருவர் கூறியுள்ளார். “வன்முறை நடந்த இடத்தில் இருந்து வந்து, ‘நாடகத்தை பாருங்கள்’ என்று கூறிவிட்டு அன்று மாலையே கார்கில் சென்றுவிட்டார்” என்று ஜித்தின் அத்தை சந்திரவதி கூறினார்.

              

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “சுபோத் குமார் சிங் இருந்த இடத்தில் ஜித்து பவுஜி இருந்துள்ளார். இரண்டு போலீஸ் குழுக்கள் ஜம்மு-காஷ்மீருக்கு ஜித்துவை விசாரிக்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். 

வன்முறை தொடர்பான வீடியோ ஒன்றில் ‘மாரோ, அவனுடைய துப்பாக்கியை எடு’ என்று ஒரு குரல் பேசுகிறது. கூர்மையான ஆயுதங்களால் சுபோத் குமார் தாக்கப்பட்டுள்ளார். பின்னர், அவரது தலையில் துப்பாக்கியால் சுட்டுள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close