[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி? : தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு..!

exit-polls-congress-may-rule-in-rajasthan

ராஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க வாய்ப்பு இருப்பதாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ராஜஸ்தானில் மொத்தமாக உள்ள 200 தொகுதிகளுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 11-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ராஜஸ்தானை பொருத்தவரை கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் மாறிமாறி ஆட்சியமைத்து வருகின்றன. தற்போது முதலமைச்சர் வசுந்தர ராஜே தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க வாய்ப்பு இருப்பதாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பின்படி;

மொத்த தொகுதிகள்- 200

பாஜக- 85
காங்கிரஸ்- 105
மற்றவை-09

இந்தியா டுடே கருத்துக் கணிப்பின்படி;

காங்கிரஸ்: 119- 141 இடங்கள்
பாஜக: 55 முதல் 72 இடங்கள்
மற்றவை: 4 முதல் 11 இடங்கள்

ஆட்சியமைக்க 101 இடங்கள் தேவைப்படும் நிலையில் கருத்துக் கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் கட்சியே ஆட்சியமைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கின்றன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close