[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

ராஜஸ்தான், தெலங்கானாவில் இன்றுடன் ஓய்கிறது பிரசாரம்!

political-parties-intensify-campaign-in-telangana

தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வு பெறுவதால் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு வரும் 7ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது. பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர் அமித்ஷா, ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா மற்றும் மத்திய அமைச்சர், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியா காந்தி, குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உட்பட முக்கியத் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டனர்.

தெலங்கானாவில் ஆந்திர முதலமைச்சரும் தெலுங்கு தேசத் தலைவருமான சந்திரபாபு நாயுடுவும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்றுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வதால் பல்வேறு தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத் தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தேர்தலையொட்டி இந்த மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கூடுதல் போலீசார் குவிக்கப்படுகின்றனர். வாக்குப் பதிவு முடிந்த பின்னர் இந்த மாநிலங்களிலும் ஏற்கனவே தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிஸோராம் ஆகியவற்றுடன் சேர்த்து வாக்கு எண்ணிக்கை 11 ஆம் தேதி நடக்கிறது. அன்று மதியம் 2 மணிக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close