[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

“புலந்த்ஷர் வன்முறைக்குப் பின்னால் காங்கிரஸ் இருக்கலாம்” - சுப்பிரமணியன் சுவாமி  

subramanian-swamy-suspects-congress-on-bulandshahr-case

புலந்த்ஷர் மாவட்ட வன்முறைக்கு காங்கிரஸ் கட்சி காரணமாக இருக்கலாம் என்று பாஜக மூத்தத்தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றின் வனப்பகுதியில் 25 பசுக்கள் இறந்த நிலையில் கிடந்ததாக தெரிகிறது. இதனையடுத்து, சட்டவிரோதமாக பசு வதைக் கூடம் செயல்படுவதாக் கூறி கிராமத்திற்குள் ஒன்று திரண்ட வலதுசாரி அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்தப் போராட்டம் குறித்து கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் போராட்டக்களத்திற்கு போலீசார் விரைந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீஸ்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

திடீரென அப்பகுதியில் உள்ள சிலர், போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அதோடு, காவல் நிலையத்திற்கும் சென்று அவர்கள் தாக்குதல் நடத்தினர். போலீஸ் நிலையத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததை அடுத்து, வன்முறையை கட்டுப்படுத்த தடியடி நடத்தினர். துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது.

இந்த வன்முறையில் சுபோத் குமார் சிங் என்ற போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். முதலில் அவர் பேராட்டக்காரர்களின் கல்லெறித் தாக்குதலுக்கு உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால் அவர் மீது போராட்டக்காரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியது தெரியவந்தது. இந்நிலையில் போராட்டம் மிகப்பெரிய வன்முறையாக மாறியது.  

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய உதவிகளைச் செய்ய உத்தரட்டார். அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணத்தொகையும் அறிவித்தார்.

இந்நிலையில் புலந்த்ஷர் மாவட்ட வன்முறைக்கு காங்கிரஸ் கட்சி காரணமாக இருக்கலாம் என்று பாஜக மூத்தத்தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், புலந்த்ஷர் மாவட்ட வன்முறை உத்திரப்பிரதேசத்தின் பாஜக ஆட்சிக்கும், யோகியின் ஆட்சிக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சில தீய சக்திகள் ஏற்படுத்தியவை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் இந்த வன்முறைக்கு பின்னால் இருக்கலாம். அவர்களை நாங்கள் வெளிக்கொணர்வோம் என்று தெரிவித்துள்ளார்.

உத்திரப்பிரதேசம் பற்றி எரிகையில் யோகி பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. அதற்கு பதில் அளித்த சுப்பிரமணியன் சுவாமி, 1984ம் ஆண்டு வன்முறை காங்கிரசுக்கு ஏற்படுத்திய கெட்டப் பெயரை விட எங்களுக்கு தற்போது கெட்டப்பெயர் ஏற்படவில்லை. சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையில் இந்தியாவே பற்றி எரிந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டார்கள் என்று தெரிவித்தார்


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close