[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது

உ.பி.வன்முறை.. கல்லெறி தாக்குதலோடு போலீசாரை துப்பாக்கியால் சுட்டது அம்பலம்..!

cop-among-2-killed-as-mob-targets-police-in-up

உத்தரபிரதேசத்தில் பசுக்கள் கொல்லப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து நடைபெற்ற வன்முறையில் போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். முதலில் அவர் கல்லெறிந்து கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அவர் பசு பாதுகாவலர்கள் கும்பலின் துப்பாக்கிச் சூட்டிற்கு உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றின் வனப்பகுதியில் 25 பசுக்கள் இறந்த நிலையில் கிடந்ததாக தெரிகிறது. இதனையடுத்து, சட்டவிரோதமாக பசுவதைக் கூடம் செயல்படுவதாக் கூறி கிராமத்திற்குள் ஒன்றுதிரட்ட வலதுசாரி அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சாலைகளை மறித்தனர். இந்தப் போராட்டம் குறித்து உள்ளூர் போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலை அடுத்து போலீசார் அந்த இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். சாலையை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சரிசெய்ய முயன்றுள்ளனர்.

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீஸ்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. திடீரென அப்பகுதியில் உள்ள சிலர், போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அதோடு, காவல் நிலையத்திற்கும் சென்று அவர்கள் தாக்குதல் நடத்தினர். போலீஸ் நிலையத்திற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தீ வைத்ததை அடுத்து, வன்முறையை கட்டுப்படுத்த தடியடி நடத்தினர். துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. இந்த வன்முறையில் சுபோத் குமார் சிங் என்ற போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். முதலில் அவர் பேராட்டக்காரர்களின் கல்லெறித் தாக்குதலுக்கு உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால் அவர் மீது போராட்டக்காரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியது தெரியவந்துள்ளது. போராட்டக்காரர்களின் தாக்குதலுக்கு பின்னர் தன் ஜுப்பில் முடியாத நிலையில் இருந்த சுபோத் குமார் சிங் மீது போராட்டக்காரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அத்துடன் அவரிடம் இருந்த செல்போன்கள் மற்றும் துப்பாக்கியை எடுத்துவிட்டு சென்றுவிட்டனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளது. பிரேத பரிசோதனை முடிவும் அவர் இடது கண் அருகே துப்பாக்கி குண்டு பட்டு உயிரிழந்ததை உறுதி செய்துள்ளது. இதேபோல துப்பாக்கிச் சூட்டில் அப்பகுதியை சேர்ந்த சுமித் என்ற இளைஞரும் உயிரிழந்துள்ளார். இதுதவிர சில போலீசார் காயம் அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய உதவிகளைச் செய்ய உத்தரவிட்டுள்ளார். அத்துடன் உயிரிழந்த சுபோத் குமார் சிங்கின் குடும்பத்திருந்து ரூபாய் 40 லட்சம் நிவாரணமும், சுமித் குடும்பத்தினருக்கு 10 லட்சம் நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய சுபோத் குமார் சிங்கின் கார் டிரைவரான ராம், ஒரே நாளில் இரண்டு முறை சுபோத் குமார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறினார். “முதலில் தாக்கியபோது ஆபத்தான நிலையில் இருந்த சுபோத் குமாரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். வரும் வழியில் ஒரு கும்பல் வழிமறித்தது. என் உயிரை காக்க நான் ஒடிவிட்டேன். அந்த கும்பல் ஜீப் அருகே வந்தார்கள். அதன்பின் என்ன நடந்தது என்று தெரியாது” என கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close