[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸின் தலைவர் அமித்ஷா; ராகுல்காந்தி அல்ல - பினராயி விஜயன்

not-rahul-gandhi-but-amit-shah-is-your-leader-vijayan-to-chennithala

கேரளாவில் காங்கிரஸ் கட்சியினரின் தலைவர் ராகுல் காந்தி இல்லை எனவும் அமித்ஷாதான் எனவும் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 28 ம் தேதி உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதில், அனைத்து பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் செல்லலாம் என தெரிவித்திருந்தது. இந்தத் தீர்ப்பை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உடனடியாக அமல்படுத்தினார். 

இதனால் கேரளாவில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பாஜக, இந்து அமைப்புகள் என பல்வேறு தரப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதையடுத்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிரபிக்கப்பட்டுள்ளது. அங்கு தற்போது மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ள நிலையில் இந்து அமைப்புகளின் போராட்டத்தை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து சபரிமலை விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் கேரள சட்டசபை கடந்த 2 நாட்களாக முடங்கியுள்ளது. இந்நிலையில் மூன்றாவது நாளாக இன்று சட்டசபை தொடங்கியது. இதில் கேள்வி நேரத்தின் ஆரம்பத்தில், சபாநாயகர் பி. ஸ்ரீராமகிருஷ்ணனுடன் காங்கிரஸ் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்றத்தின் பிரதான வாசலுக்கு முன்னால் பினராயி விஜயன் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். சபரிமலையில் போடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் கெடுபிடிகள் அனைத்தையும் முற்றிலும் நீக்க வேண்டும் என கோரி வருகின்றனர்.

இதேபோல சில எம்.எல்.ஏ.க்கள் அவையின் மையப்பகுதியில் நின்றவாறே ‘சபரிமலையை பாதுகாப்போம்’ என கோ‌ஷமிட்டனர். பினராயி விஜயனுக்கு எதிராகவும் கோ‌ஷங்களை எழுப்பியதால் சபையில் கடும் அமளி நிலவியது. இதனால் மூன்றாவது நாளாக சட்டசபை முடங்கியது.

இந்நிலையில், கேரளாவில் காங்கிரஸ் கட்சியினரின் தலைவர் அமித்ஷா எனவும், ராகுல் காந்தி அல்ல எனவும் முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். இதையடுத்து எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலாவுக்கும் பினராயி விஜயனுக்கும் இடையே வார்த்தை போர் தீவிரமடைந்துள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close