[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

குஜராத்தில் வினாத்தாள் வெளியான விவகாரம்.. பாஜகவை சேர்ந்த இருவர் உள்பட 3 பேர் கைது..!

congress-leader-rahul-gandhi-came-kauvery-hospitalgujarat-question-paper-leak-case-3-arrested-including-2-bjp-workers

குஜராத்தில் போலீஸ் பணிக்கான எழுத்துத் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக பாஜகவை சேர்ந்த இருவர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத்தில் காலியாக உள்ள 9173 காவலர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்யும் பொருட்டு அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதற்காக கிட்டத்தட்ட 8.75 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அதன்படி எழுத்துத் தேர்வு தொடங்கவிருந்த ஒரு சில மணி நேரத்திற்கு முன்னதாக வினாத்தாள்கள் விடையோடு வெளியாகின. வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்களிலும் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் தேர்வு ரத்து செய்யப்பட்டது. தேர்வு எழுத காத்திருந்தவர்கள் திரும்பிச் சென்றனர். இதுதொடர்பான விசாரணைக்கு குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியும் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த இரண்டு பேர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜகவை சேர்ந்த சவுத்ரி மற்றும் மன்கார் படேல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை தவிர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும் இந்த விவகாரத்தில் சிக்கியுள்ளார். இதனிடையே கைது செய்யப்பட்ட பாஜகவை சேர்ந்த இருவரையும் கட்சியிருந்து நீக்கி அக்கட்சியின் மாநில தலைமை உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக காங்கிரஸ் கட்சி இவ்விவகாரத்தில் ஆளும் மாநில அரசை குற்றம்சாட்டியிருந்தது. அதாவது மாநில அரசாங்கம், எதிர்கால வேலைக்காக போராடும் அனைத்து இளைஞர்களின் வாழ்க்கையிலும் விளையாடுவதாக சாடியிருந்தது. அத்துடன் தேர்வர்கள் மாதக் கணக்கில் சிரமப்பட்டு தேர்வுக்கு தயாரான நிலையில் வினாத்தாள் வெளியானதால் அவர்கள் வேதனையோடு, எரிச்சல் அடைந்திருந்திப்பதாவும் கூறியிருந்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close