[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

‘ஈவிஎம் அறையில் சிசிடிவி காட்சிகள் வேலை செய்யவில்லை’- தேர்தல் ஆணையம் ஒப்புதல்

poll-body-admits-to-security-lapses-at-evm-store-rooms

ம.பி.யில் தேர்தலுக்கு பின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டிருந்த அறையில் ஒரு மணி நேரம் சிசிடிவி காட்சிகள் வேலை செய்யவில்லை என்பதை தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டுள்ளது.

மத்தியப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 28-ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி டிசம்பர் 11-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினமே வெற்றி, தோல்வி அறிவிக்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் போலீசார் பாதுகாப்புடன் அந்தந்த பகுதிகளின் முக்கியமான பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், போபாலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் ஒரு மணி நேரம் வேலை செய்யவில்லை என்பதை தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளது. அதாவது யாரும் எதிர்பாராதவிதமாக அறையில் ஒரு மணி நேரம் மின்வெட்டு இருந்த காரணத்தினால் சிசிடிவி காட்சிகள் இயங்கவில்லை என தெரிவித்துள்ளது. “ நவம்பர் 30-ஆம் தேதி காலை 8.19 மணி முதல் 9.35 மணி வரை மின்சாரம் இல்லை. இதன் காரணமாக இடைப்பட்ட நேரத்தில் காட்சிகளை பதிவு செய்யமுடியவில்லை. இதனையடுத்து இன்வெர்ட்டர்கள் கொண்டுவரப்பட்டு மின்சார வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது சிசிடிவி காட்சிகள் முறையாக வேலை செய்கின்றன. அதேசமயம் காவலர்கள் எப்போதும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் முழுமையாக பாதுகாப்புடன் உள்ளன. அதற்கு எந்த சேதமும் இல்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சாகரில் வாக்குப்பதிவு முடிந்த பின்பும் இயந்திரங்களை சரியான நேரத்தில் ஒப்படைக்காமல் தாமதப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையரை சந்தித்திருந்தனர். இந்நிலையில் தற்போது சிசிடிவி காட்சிகள் வேலை செய்யாததை தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close