[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

பாதுகாக்கப்படுமா பாகிஸ்தானில் உள்ள ராஜ் கபூர் வீடு?

raj-kapoor-house-in-pakistan-demolished

பாகிஸ்தானில் உள்ள ராஜ் கபூரின் வீடு மியூசியமாக மாற்றப்படும் என செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது அந்த வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.

‘தி ஷோ மேன்’ என்று அழைக்கப்பட்டவர் பாலிவுட் நடிகர் ராஜ் கபூர். திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் பணிகளிலும் சிறந்து விளங்கிய இவர் எட்டு ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்றவர். அவரது படங்களான ‘ஆவாரா’ (1951) மற்றும் ‘பூட்’ ‘பாலிஷ்’ (1954) ஆகியவை கேன்ஸ் திரைப்படத் திருவிழாவில் பால்மே டியோர் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டன.

        

பாலிவுட் உலகில் கோலோச்சிய ராஜ் கபூர் பிரிட்டீஷ் இந்தியாவில், பாகிஸ்தானில் தற்போது உள்ள பெஷாவரில் 1924, டிசம்பர் 14ம் தேதி பிறந்தார். ராஜ் கபூரின் தாத்தா பஷேவர்நாத் கட்டிய ஹேவேலி என்ற வீட்டில் தான் அவரது குடும்பத்தினர் அனைவரும் வளர்ந்தனர்.

ராஜ் கபூர் தன்னுடைய இளமை காலத்தை அந்த வீட்டில்தான் கழித்தார். பின்னர், நாடு விடுதலை அடைந்த போது, இந்தியா பாகிஸ்தான் தனித்தனியாக பிரிந்தது. அப்போது, ராஜ் கபூர் குடும்பத்தினர் இந்தியாவிற்கு குடிபெயர்ந்துவிட்டனர்.  

      

பெஷாவரில் உள்ள அந்த வீடு பலரின் கைகளுக்கு மாறியது. சமீபத்தில் அந்த வீடு கடுமையாக சேதமடைந்தது. இருப்பினும், வீட்டின் 60 அறைகள் நல்ல நிலைமையில் உள்ளதாக கூறப்பட்டது.

         

இதனிடையே, ராஜ் கபூர் குடும்பத்தினர் வாழ்ந்த ஹேவேலி வீட்டினை மியூசியமாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி இந்திய செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ராஜ் கபூரின் மகன் ரிஷி கபூரிடம் இந்து இந்தக் கோரிக்கை வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். 

        

இந்நிலையில், பெஷ்வரில் உள்ள ராஜ் கபூரின் வீட்டின் சில பகுதிகள் இடிந்து விழுந்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு தொல்லியல் துறை அதிகாரி கூறுகையில், “வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வீட்டினை பாதுகாக்க சுமார் 11 மணி நேரம் போராடினோம். ஆனால், 98 வருடம் பழமையான அந்த 4 மாடி கட்டிடத்தின் மேல் தளம் இடிந்து விழுந்துள்ளது. மீதமுள்ள கட்டிடமும் மிக மோசமாக சேதமடைந்துள்ளது. வீடு சேதமடைந்த போதும், நிலையாகவே உள்ளது. மேற்கொண்டு சேதம் எதுவும் நிகழாமல் இருந்த வீட்டை உற்று நோக்கி வருகிறோம்” என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close