[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

6 வயதில் திருமணம், 18 வயதில் விவாகரத்து : வாழ்வை வென்றெடுத்த பெண்

rajasthan-child-bride-s-marriage-annulled-after-12-years

6 வயதி திருமணம் முடிந்த சிறுமி, 12 வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து பெற்ற சம்பவம் ராஜஸ்தானில் நிகழ்ந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பிதாவாஸ் கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுமிக்கு 12 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. கூலித்தொழிலாளியின் மகளான அந்த சிறுமி சரண் நகர் பகுதியில் வசித்து வந்தார். அவர் பெயர் பிந்துதேவி. தற்போது இந்த அந்த சிறுமிக்கு 18 வயது நிரம்பி இளம் பெண்ணாகியுள்ளார். அவருக்கு விவரம் அறியா வயதில் செய்யப்பட்ட திருமணத்தில் விருப்பமில்லாமல் இருந்துள்ளார். இதனால் அதிலிருந்து விடுபட நினைத்தப் அப்பெண் ஜோத்பூரில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

ஆனால் அப்பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை மிரட்டியுள்ளனர். இந்நிலையில் அந்த பெண்ணிற்கு சாரதி ட்ரஸ்ட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் உதவி செய்துள்ளது. நீண்ட நாட்களாக நடந்து வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பை வழங்கிய நீதிபதி பி.கே.ஜெயின், குழந்தை திருமணம் என்பது கடுமையான குற்றம் என கண்டித்தார். அப்பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர், திருமணம் செல்லாது என்றும் தீர்ப்பளித்தார். 

இதுதொடர்பாக பேட்டியளித்த அப்பெண், “குழந்தைத் திருமணம் என்ற பிடியிலிருந்து நான் விடுதலை பெற்றுவிட்டேன். இனி என் கனவுகளை நினைவாக்க என் எண்ணம்போல் படிப்பேன்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இதுதொடர்பாக அப்பெண்ணிற்கு உதவி தொண்டு நிறுவனம் கூறுகையில், பிந்துதேவியின் சிறந்த முயற்சி அவருக்கு ஒரு சிறந்த மறுவாழ்வை பெற்றுத்தந்துள்ளதாக தெரிவித்துள்ளது.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close