[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS புதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்

இன்று அர்ஜெண்டினா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்பை சந்திக்கவும் திட்டம்

pm-modi-to-leave-argentina-today

ஜி20 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று அர்ஜெண்டினா பயணம் மேற்கொள்கிறார். இப்பயணத்தின்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.

ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு நவம்பர் 28-ஆம் தேதி அர்ஜெண்டினாவில் தொடங்குகிறது. ஆண்டு தோறும் நடைபெறும் இந்த மாநாட்டில் உலக அளவில் பொருளாதாரத்தில் முன்னேற்றத்துடன் காணப்படும் 20 நாட்டு தலைவர்கள்   பங்கேற்பார்கள். இம்மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அர்ஜெண்டினா செல்கிறார்.

ஜி20 மாநாட்டையொட்டி அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப், பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே ஆகியோர் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் எனத் தெரிகிறது. ஆனால் என்ன விவகாரம் குறித்து பேசப் போகிறார்கள் என்ற தகவல்கள் இதுவரை தெரியவில்லை.

இதுதவிரவும் டொனால்ட் டிரம்ப், அர்ஜெண்டினா, சீனா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஜி20 மாநாட்டில் வர்த்தகம், சூழலியல் மாற்றம், சுகாதாரம் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து முக்கிய விவாதங்கள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close