[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. மீது பாலியல் புகார் ! கட்சியில் இருந்து நீக்கம்

cpm-leader-pk-sasi-suspended-from-party-over-harassment-charge

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ பி.கே. சசியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தாற்காலிகமாக நீக்கி அக்கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

கேரள மாநிலம் ஷோரனூர் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ பி.கே. சசி. அவர் மீது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவர்  பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக, மாநில கட்சி தலைமையிடம் புகார் ஒன்றை தெரிவித்து இருந்தார்.

(எம்எல்ஏ பி.கே. சசி )

ஆனால் இந்த புகாரை எம்எல்ஏ பி.கே. சசி மறுத்து வந்த நிலையில் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த விவகாரம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி வரை சென்றது. இதனையடுத்து இந்த புகாரை விசாரிக்க குழு ஒன்றையும் அமைத்தது கட்சியின் தலைமை. 

இந்நிலையில் விவகாரம் விஸ்வரூபம் எடுக்க, சசி மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நடவடிக்கை எடுத்துள்ளது. சசி மீதான புகாரை விசாரிக்க கூட்டப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் விசாரணைக்கூட்டத்தில் சசி பேசியதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல்கள் சமர்பிக்கப்பட்டன. பின்னர் புகாரின் அடிப்படையில்  எம்எல்ஏ பி.கே. சசி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து 6 மாதகாலம் நீக்கி வைக்கப்படுவதாக மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. 

(சீதாராம் யெச்சூரி)

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கேரளாவின் எதிர்க்கட்சிகள், ஆளும் கட்சி எம்.எல்.ஏ. என்பதால் சசியை காப்பாற்ற கேரள அரசு முயற்சி செய்கிறது. அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும் காவல்துறையும், நீதிமன்றமும் அவர் மீது சரியான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close