[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக மாவட்டந்தோறும் ஜூன் 22 முதல் திமுக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • BREAKING-NEWS மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
  • BREAKING-NEWS தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி

கார் விபத்தில் ஒருவர் மரணம் - பெண் பேஷன் டிசைனர் கைது 

man-killed-by-speeding-car-in-kolkata-woman-fashion-designer-held

கொல்கத்தாவில் பேருந்துக்காக காத்திருந்த ஒருவர் மீது காரை ஏற்றிவிட்டு நிற்காமல் தப்பி சென்ற பெண் பேஷன் டிசைனரை போலீசார் கைது செய்தனர். 

கொல்கத்தாவில் ஈஸ்டென் மெட்ரோபோலியன் நெடுஞ்சாலையில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் பேருந்துக்காக காத்திருந்ததாக தெரிகிறது. அப்போது அதி வேகமாக வந்த கார் ஒன்று அவரின் மீது ஏற்றி விட்டு நிற்காமல் சென்றது. 

இதையடுத்து விபத்திற்குள்ளானவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

இதையடுத்து காரில் வந்தது பெண் பேஷன் டிசைனர் அதிதி என்பதும் சம்பவம் நடந்தபோது அவர் குடிபோதையில் இருந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. மேலும் இந்த வழக்கில் அதிதி கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close