[X] Close
NEWS
Puthiyathalaimurai-logo
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது

சபரிமலையில் பக்தி பாடல்களை பாடிய 60 பேர் கைது..!

60-sabarimala-pilgrims-detained-for-violating-prohibitory-orders

சபரிமலையில் பாதுகாப்பிற்கான தடை உத்தரவை மீறி வவருநாடா பகுதியில் பக்தி பாடல்கள் பாடிய 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது. இதனையடுத்து கடந்த ஐப்பசி மாதம் நடை திறக்கப்பட்டபோது பெண்கள் சபரிமலை கோயிலுக்கு செல்ல முயன்றனர். ஆனால் ஐயப்ப பக்தர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் ஒரு பதற்றமான சூழ்நிலை உண்டானது.

தற்போது சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. எனவே அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சன்னிதானத்திலும் போலீசார் பலத்த பாதுகாப்புகளை செய்துள்ளனர். அத்துடன் வவருநாடா பகுதியில் 4 பேருக்கு மேல் ஒன்றாக கூடக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர். ஆனால் சபரிமலைக்கு சென்ற பக்தர்களில் சுமார் 60 பேர் வவருநாடா பகுதியில் நின்று கொண்டு பக்தி பாடல்களை பாடியுள்ளனர். எனவே அவர்களை போலீசார் கைது செய்தனர்.

வவருநாடா பகுதியில் பாதுகாப்பிற்காக போடப்பட்டிருந்த தடை உத்தரவையும் மீறி பக்தி பாடல்களை பாடியதால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.பி ன்னர் கைது செய்யப்பட்டவர்களை போலீசார் பம்மைக்கு அழைத்துச் சென்றனர். மண்டல பூஜைக்காக நடை நவம்பர் 17-ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில் இதுவரை கிட்டத்தட்ட 100 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

முன்னதாக சபரிமலைக்கு சென்ற மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிலக்கல் பகுதியில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அமைச்சரின் கார் மட்டுமே பம்பைக்கு செல்ல முடியும். அமைச்சருடன் வந்தவர்கள் அரசு பேருந்தில் செல்ல வேண்டும் என போலீசார் கட்டுப்பாடு விதித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் அரசு பேருந்திலேயே பம்பைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்தார்.

வழக்கமாக இந்த கால கட்டத்தில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும். ஆனால் இந்த வருடம் போலீசார் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் வழக்கத்தை விட பக்தர்கள் குறைவான அளவிலேயே வந்து செல்கின்றனர். பக்தர்களை விட பாதுகாப்பிற்காக போலீசாரே அங்கு அதிகம் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close