[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு
  • BREAKING-NEWS 2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மீண்டும் அச்சத்தில் அயோத்தி? - குடும்பம் குடும்பமாக வெளியேறும் மக்கள் 

ayodhya-muslim-families-fear-1992-like-violence-send-children-and-women-away-watch

ராமர் கோயில் கட்ட அவசர சட்டம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், அயோத்தியில் வாழும் இஸ்லாமிய குடும்பங்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளன.

ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி பகுதியின் உரிமை தொடர்பான வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது முதல் ராமர் கோயில் கட்ட அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை பலராலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. 

உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் காங்கிரஸ், பாஜகவைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்களும் அது குறித்து கருத்து தெரிவிப்பதில்லை. இருப்பினும், பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள், இதர கட்சிகளை சேர்ந்தவர்களும், பாஜகவில் உள்ள சில தலைவர்களும், ஒரிரு காங்கிரஸ் கட்சியினரும் கூட இந்தக் கருத்தினை தொடர்ச்சியாக வைத்து வருகின்றனர். 

  

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு தரப்பில் இருந்து ஆளும் பாஜகவுக்கு இந்த விவகாரத்தில் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் தேர்தல் அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டிருந்ததுதான்.

இத்தகைய அழுத்தமான நேரத்தில் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இன்று அயோத்தி நகருக்கு வருகை புரிந்துள்ளார். உத்தவ் தாக்கரே உடன் அவரது மகன் ஆதித்ய தாக்கரேவும் வருகை புரிந்துள்ளார். அவர்கள் கட்சியினர் ஏராளமானோர் வந்துள்ளனர். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அங்குள்ள மடாதிபதிகளை சந்தித்து இவர்கள் ஆதரவு திரட்டுகிறார்கள். இரண்டு நாட்கள்  நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்கள். 

      

சிவசேனா சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெறுவது ஒரு புறம் இருக்க விஷ்வ ஹிந்த் பரிஷத் அமைப்பு சார்பில் நாளை மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது. இதற்காக ஆயிரக்கணக்கானோர் அயோத்தியை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். 

உத்தவ் தாக்கரே அயோத்திக்கு வருகை தருவதையொட்டி தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமென இஸ்லாமிய குடும்பங்கள் உத்தரப் பிரதேச அரசிடம் வலியுறுத்தியிருக்கிறார்கள். மீண்டும் 1992 ஆண்டின் நிலை ஏற்படுமோ என்ற அச்சத்தில் அங்குள்ள இஸ்லாமியர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள குழந்தைகள், பெண்கள், முதியவர்களை நகரத்தை விட்டே வெளியேற்றி, வேறு பாதுகாப்பான இடங்களில் குடிவைக்க தொடங்கியுள்ளனர். 

               

இதற்கிடையில், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவு கூறிய கருத்து முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. “17 நிமிடங்களில் பாபர் மசூதியை இடிக்கப்பட்ட நிலையில், ராமர் கோயில் கட்ட ஒரு சட்டம் கொண்டு வர எப்படி இவ்வளவு நேரம் ஆகிறது?, மத்தியிலும், மாநிலத்திலும் பாஜகவே ஆட்சியிலும் உள்ளது. இதனைவிட வேறு என்ன வேண்டும்” என அவர் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அதேபோல், விஷ்வ ஹிந்து பரிஷத், ராம பக்தர்களை ஒன்றிணைக்கும் முயற்சியை உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரிய வரவேற்றுள்ளார். ராமர் கோயில் கட்டும் பணிகள் நவம்பர் 25 ஆம் தேதி முதல் தொடங்கும் என பாஜகவைச் சேர்ந்த ரன்ஜூட் பகதூர் ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார். மேலும், ராமர் கோயில் அயோத்தியில்தான் இருந்தது, இருக்கிறது, இருக்கும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.  

             

தற்போதைய நிலை குறித்து அயோத்தி வழக்கை தொடர்ந்த ஹசிம் அன்சாரியின் மகன் இக்பால் அன்சாரி, “ராமர் கோயில் கட்டுவதற்காக அரசு சட்டம் கொண்டு வந்தால் அதில் எங்களுக்கு பிரச்னை இல்லை. பாஜக அரசு மீதும் எங்களுக்கு எவ்வித பிரச்னையும் இல்லை. உண்மையில் அவர்கள் பணி செய்யும் விதம் மகிழ்ச்சியாகவே உள்ளது. இருப்பினும், அரசியல் ஆதாயத்திற்காக இங்கு சிலர் வந்து ஆர்ப்பாட்டங்கள், நடத்துவதுதான் பிரச்னையாக உள்ளது. தற்போது இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் உள்ளது. அவர்களது பேரணியின் போது ஏதேனும் நடந்துவிட்டால், இந்த அரசியல்வாதில் என்ன செய்வார்கள்?” என்று கூறியிருந்தார். 

தன்னுடைய வீட்டில் உள்ள குழந்தைகளையும், பெண்களையும் நகரத்தைவிட்டு வெளியேற்றி வைத்த ஒருவர் பேசுகையில்,  “1992, டிசம்பர் 6 தேதி 17 இஸ்லாமியர்கள் எரித்துக் கொல்லப்பட்டார்கள். அதனை எங்களால் மறக்க முடியவில்லை. ராமர் கோயில் கட்டுவதற்கு பொறியாளர்களையும், தொழிலாளர்களையும் தேர்வு செய்து கொண்டிருக்கிறார்கள்” என்றார்.  

அயோத்தியில் ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி பகுதியின் உரிமை தொடர்பான வழக்கு நீண்ட காலமாக நடந்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் சமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. 

இதை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு கடந்த மாதம் 29 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, வழக்கு விசாரணை தேதி குறித்து ஜனவரி மாதம் முடிவெடுக்கப்படும் என உத்தரவிட்டது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close