[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

தொலைக்காட்சி விளம்பரத்தில் பாஜக முதலிடம்!

bjp-becomes-the-number-one-advertiser-on-television

5 மாநில தேர்தல்களை அடுத்து தொலைக்காட்சி விளம்பரங்களில் பாஜக கவனம் செலுத்தி வருகிறது. தொலைக்காட்சி விளம்பரத்தில் பாஜக முதலிடத்தில் உள்ளது

வரும் டிசம்பருடன் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் 
முடிவடைகிறது. தெலுங்கானா மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதம் வரை உள்ள நிலையில் முன்கூட்டியே சட்டப்பேரவையை கலைக்க முதல்வர் சந்திரசேகர் ராவ் முடிவு செய்தார். இதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு சட்டப்பேரவை கலைக்கப்பட்டது. எனவே 5 மாநிலங்களுக்கும் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் பாஜக, காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமதி உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. சுவர் விளம்பரங்கள், பொதுக்கூட்டங்கள் என அனைத்து வகையிலும் கட்சிகள் தங்கள் பிரசாரத்தை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் பிரசாரத்தில் ஒரு அங்கமாக தொலைக்காட்சி விளம்பரங்களில் பாஜக கவனம் செலுத்தி வருகிறது. தொலைக்காட்சி விளம்பரத்தில் பாஜக தொடர்பான விளம்பரங்கள் முதலிடத்தில் உள்ளன. BARC வெளியிட்டுள்ள பட்டியலில் 22,099 புள்ளிகளில் பாஜக அதிக விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.( நவம்பர்10-16 ) அடுத்தப்படியாக நெட்பிலிக்ஸ், டிரிவாகோ, சந்தூர் சாண்டல் சோப் ஆகியவை பட்டியலில் உள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள BARC சிஇஓ, ''கடைகோடி மக்களும் தொலைக்காட்சியுடன் இணைந்திருக்கின்றனர். ஆகையால் அரசியல் கட்சிகள் தொலைக்காட்சி விளம்பரங்களை கையில் எடுக்க தொடங்கியுள்ளன'' என தெரிவித்தார்.

தொலைக்காட்சி விளம்பரங்கள் குறித்த கேள்விக்கு பாஜகவின் தலைமை ஊடக பிரிவு தலைவர் அனில் பலூனி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.  கட்சி சார்ந்த விளம்பங்களில் பாஜக மட்டுமே பட்டியலில் இடம்பிடித்துள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எந்த கட்சியும் பட்டியலில் இடம் பிடிக்கவில்லை.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close