[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

ஐயப்ப பக்தர்கள் பாடுவார்கள் அதனை தடுக்கும் அதிகாரம் போலீஸ்க்கு இல்லை கேரள உயர்நீதிமன்றம்

can-t-stop-pilgrims-in-groups-chanting-ayyappa-songs-kerala-high-court

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்திப் பாடல்களை பாடுவதை தடுக்க கூடாது என்று கேரள மாநில காவல்துறைக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கோயில் சன்னிதானத்தில் 144 தடை உத்தரவு அசம்பாவிதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதற்குதானே தவிர, தரிசனத்துக்கு வரும் பக்தர்களை ஒடுக்கவதற்கு அல்ல என்றும் கேரள போலீஸ்க்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

Read Also -> அந்தமானில் பயங்கரம்: பழங்குடியினர் தாக்கி அமெரிக்க இளைஞர் உயிரிழப்பு!

கேரளாவில் பிரசித்திப் பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலின் நடை கடந்த 16 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மண்டலப்
பூஜைக்காக திறக்கப்பட்டது. மண்டலப் பூஜைக்காக திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை டிசம்பர் மாதம் 27 ஆம்
தேதி  சாத்தப்பட்டு மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30 ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படும்.
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் காரணமாக ஏராளமான பிரச்சனைகளை சபரிமலை கோயில் இப்போது சந்தித்து வருகிறது.

Read Also -> “விடுமுறை நாளில் யாரும் பேக்ஸ் இயந்திரம் அருகே இருக்கமாட்டார்கள்”- காஷ்மீர் ஆளுநர் விளக்கம் 

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வழிபட அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் எனக் கூறி
உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து கடந்த மாதம் தொடக்கத்தில் பெண்கள்
சிலர் சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டபோது வருகை தந்தனர். அவர்களை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள் பலர்
போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தினர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஆயிக்கணக்கானோர் சபரிமலையில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட
மனுக்களை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அவற்றின் மீது ஜனவரி 22ஆம் தேதி விசாரணை நடைபெறும் என
உச்சநீதிமன்றம்  கூறியது. மேலும் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்றும் தெரிவித்துவிட்டது. இந்நிலையில்
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பை நடைமுறைப்படுத்த கால அவகாசம் அளிக்குமாறு உச்சநீதிமன்றத்தை
திருவாங்கூர் தேவஸம் போர்டு மனு தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சன்னிதானத்தில் பக்தி பாடல்களை ஐயப்ப பக்தர்கள் 70 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், பக்தர்களை கோவிலில் தங்க விடாமல் விரட்டி அனுப்பினர். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் கேரள அரசுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பினர். அப்போது அரசு தரப்பு வழக்கறிஞரிடம் பேசிய நீதிபதி "சபரிமலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு என்ற பெயரில் இதுபோன்று போலீஸ் எப்படி தடியடி போன்ற மோசமான நடவடிக்கையில் ஈடுபட முடியும் ? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

இதனையடுத்து அரசு தரப்பில் இருந்து பல்வேறு விளக்கங்களுடன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள் பி.ஆர்.ராமசந்திரா மற்றும் என்.அனில் குமார் அடங்கிய அமர்வு "சபரிமலை ஒரு சிறப்புமிக்க கோயில். பல ஆண்டு காலமாக குருசுவாமி தலைமையில் குழுவாக பக்தர்கள் வருகிறார்கள். குழுவாக வரும் பக்தர்களை ஐயப்பனின் பாடல்களை பாடுவார்கள். அதனை தடுக்கும் உரிமை போலீஸ்க்கு இல்லை. கோயில் சன்னிதானத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டு இருப்பது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்கத்தானே தவிர, பக்தர்களை ஒடுக்குவதற்காக அல்ல. ஏதாவது பிரச்சனை ஏற்பட்டாமல் அதனை போலீஸ்தான் தடுக்க வேண்டும். அது அவர்களின் கடமை. மேலும் ஐயப்பன் சன்னிதானத்தில் 144 தடை உத்தரவு எதற்கு என்று விளக்கமளிக்குமாறு கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ளது " என்று கூறினர்.  


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close