[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்ற கோத்தபய ராஜபக்ச நவ.29 இந்தியா வருகை
  • BREAKING-NEWS ரஜினி, கமல், விஜய் சேர்த்து வந்தாலும் அதிமுக சிங்கிளாக எதிர்க்கும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS மக்களின் நலனுக்காக கமலுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவேன் - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS அவசியம் ஏற்பட்டால் நானும், ரஜினியும் இணைவோம் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்
  • BREAKING-NEWS உள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய தாத்தா - ஆத்திரத்தில் தந்தையை கொன்ற மகன்

karnataka-man-bludgeoned-to-death-by-son

பெங்களூருவில் 15 வயது பேத்தியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய முதியவரை அவரது மகனே கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பெங்களூரு கரீனாகள்ளி பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரப்பா மகன் குமார். இவரின் 15 வயது மகளுக்கும் சுப்பிரமணி என்பவரது மகனுக்கும் நவம்பர் 19 ஆம் தேதி திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்திருந்தனர். 

இதற்கு குமாரின் தந்தை ஈஸ்வரப்பா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். ஆனால் குமார் அவரின் பேச்சை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதையடுத்து ஈஸ்வரப்பா குழந்தை உதவி மையத்தை தொடர்பு கொண்டு அதன் மூலம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். 

தகவலறிந்து வந்த போலீசார் குமாரையும் சுப்பிரமணியையும் கடந்த ஞாயிற்று கிழமை எச்சரிக்கை செய்துள்ளனர். திருமணம் செய்து வைத்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்து சிறுமியையும் அவரது தாயாரையும்  கவுன்சிலிங் கொடுக்க அழைத்துச் சென்றுள்ளனர். 

இதனால் ஆத்திரமடைந்த குமாரும் சுப்பிரமணியும் அன்று இரவே ஈஸ்வரப்பாவை தாக்கியுள்ளனர். இதில், ஈஸ்வரப்பா அருகில் இருந்த கல்லில் மோதி படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். உடனே அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அடுத்த நாள் காலை சிகிச்சை பலனின்றி ஈஸ்வரப்பா பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையடுத்து மருத்துமனையில் இருந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் குமாரை கைது செய்தனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட சுப்பிரமணியை போலீசார் தேடி வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close