[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

பான் கார்டு விண்ணப்பத்தில் புதிய திருத்தம்!

father-s-name-in-pan-application-forms-will-not-be-mandatory

பான் கார்டு பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது தந்தையை விட்டுப் பிரிந்த தாய் இருந்தால், விண்ணப்பதாரர் தந்தையின் பெயரைக் குறிப்பிடுவது கட்டாயமல்ல என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது

பணபரிவர்த்தனைகளை பாதுகாப்பானதாகவும், நம்பகமானதாகவும் உருவாக்க மத்திய அரசு கொண்டு வந்தது தான் பான் கார்டு. 
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள என்எஸ்டிஎல் அமைப்பு இந்த பான் எண்ணை வழங்குகிறது. பான் கார்டு மூலம் கடன், முதலீடு, பண மதிப்பு கொண்ட வாங்கி விற்கும் நடவடிக்கைகள், வங்கி பணபரிவர்த்தனைகள் போன்ற அனைத்தையும் ஒரு கண்காணிப்பில் அரசு கொண்டு வருகிறது.

பான் கார்டு எண்ணை அடிக்கடி மாற்ற முடியாது. முகவரி மாறினாலும் நாட்டின் எந்த பகுதிக்கும் சென்றாலும் கூட பான் எண்ணை மாற்றிக்கொள்ளத் தேவையில்லை. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள், இந்தியாவில் பரிவர்த்தனையில் ஈடுபட்டாலும் பான் கார்டு அவசியமாகிறது.

பான் கார்டு விதிமுறைகளில் அடிக்கடி மாற்றம் செய்யப்பட்டு பயன்பாட்டு சிக்கல்களை தீர்க்க வழிவகை செய்யப்படுகிறது. இந்நிலையில்  பான் கார்டு பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது தந்தையை விட்டுப் பிரிந்த தாய் இருந்தால், விண்ணப்பதாரர் தந்தையின் பெயரைக் குறிப்பிடுவது கட்டாயமல்ல என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக வருமான வரித் துறை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் விரும்பினால் தாய் பெயரைக் குறிப்பிடலாம் என்றும் இந்த விதிமுறை டிசம்பர் 5ஆம் தேதி அமலுக்கு வருவதாகவும் மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close