[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

சத்திஸ்கரில் 72% வாக்குகள் பதிவு

2nd-phase-state-election-in-chattisgarh

சத்தீஸ்கரில் இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் 72 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நக்சல் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கர் மாநிலத்துக்கு இரு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டது. சத்திஸ்கர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைப்பெற்றது.முதல் கட்டமாக நக்சல் ஆதிக்கம் நிறைந்த 18 தொகுதிகளில் கடந்த 18 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் 76 சதவிகித வாக்குகள் பதிவாகின. எஞ்சிய 72 தொகுதிகளுக்கான இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது.

19 மாவட்டங்களில் உள்ள 72 தொகுதிகளில் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகல்,எதிர்க்கட்சித் தலைவர் டி.எஸ்.சிங் தியோ மற்றும் அமைச்சர்கள் என மொத்தம் ஆயிரத்து 79 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

வாக்குப்பதிவின்போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக மத்திய துணை ராணுவப் படை, எல்லைப் பாதுகாப்புப் படை, இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை என சுமார் ஒன்றரை லட்சம் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில் நேற்று  நடைபெற்ற 2 ஆம் கட்ட வாக்குப்பதில் 71.93 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. பதிவான வாக்குகள் வரும் டிசம்பர் 11 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close