[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

கேரள எம்.பி ஷானவாஸ் சென்னையில் காலமானார்..!

mi-shanavas-mp-passes-away

கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. எம்.ஐ ஷானவாஸ் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 67.

வயனாடு மக்களவை உறுப்பினரும், கேரள மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவருமான ஷானவாஸ், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது இறுதிச் சடங்கு நாளை காலை 10 மணியளவில் கொச்சியில் நடைபெற உள்ளது. இதனிடையே எம்.பி ஷானவாஸ் மறைவுக்கு கேரளாவை சேர்ந்த அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1952 ஆம் ஆண்டு கோட்டயத்தில் பிறந்த ஷானவாஸ், 1983-ம் ஆண்டு கேரள மாநில காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினரானார். ஷானவாஸ்-க்கு பேகம் என்ற மனைவியும், அமீனா என்ற மகளும், ஹசீப் என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close