[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி
  • BREAKING-NEWS தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்
  • BREAKING-NEWS சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி

மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: சுஷ்மா சுவராஜ்

sushma-swaraj-say-wont-contest-elections

2019 மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருப்பவர் சுஷ்மா சுவராஜ். 66 வயதாகும் இவர் பாரதிய ஜனதா கட்சியின் மிக மூத்த தலைவர். உச்சநீதிமன்றத்தின் முன்னாள் வழக்கறிஞரும் ஆவார். 7 முறை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். 3 மூறை சட்டப்பேரவைக்கு தேர்வாகியுள்ளார். மிக இளம் வயதில் அதாவது தனது 25 வயதில் ஹரியானா மாநில அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார். டெல்லி மாநில முதலமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

கடந்த 2014 மக்களவை தேர்தலில் மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா தொகுதியில் போட்டியிட்ட அவர் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் எதிர்க்கட்சி வேட்பாளரை தோற்கடித்தார். கட்சிக்குள் மிகுந்த செல்வாக்கு மிகுந்தவராக கருதப்பட்ட அவர் தற்போது வரும் 2019 மக்களவை தேர்தலில் போட்டியிடமாட்டேன் என திடீரென அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனது விருப்பத்தை கட்சி மேலிடத்துக்கு தெரிவித்துவிட்டதாகவும் சுஷ்மா சுவராஸ் சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1970-ஆம் ஆண்டில் அரசியலுக்குள் நுழைந்த சுஷ்மா சுவராஜ் பல அமைச்சரவை பணிகளை கவனித்துள்ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். பாஜக சார்பில் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்ற பேச்சும் சுஷ்மா சுவராஜை முன்வைத்து அடிபட்டது. தற்போது 2019 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக அதற்காக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என சுஷ்மா அறிவித்துள்ளது பாஜக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோடி அமைச்சரவையுடன் ஏதேனும் மனக்கசப்பா..? இல்லை போட்டியிட மாட்டேன் என சொல்வற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதாக என்ற தகவல்கள் தற்போது வரை தெரியவில்லை.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close