[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்

ரிசர்வ் வங்கி - மத்திய அரசு இடையே தாற்காலிக சமரசம்

rbi-board-meeting-concludes

மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே நீடித்த மோதல் போக்கில் தாற்காலிகமாக சமரசம் ஏற்பட்டுள்ளது.

நிதி விவகாரத்தில் மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கும் இடையிலான மோதல் வலுத்து வந்தது. இதனால் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிடுவதுதான் மோதலுக்கு முதல் காரணமாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் குழு கூட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. மொத்தமாக 9 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே நீடித்த மோதல் போக்கில் தாற்காலிக சமரசம் ஏற்பட்டுள்ளது. இதில் ரிசர்வ் வங்கி கையிருப்பு வைத்திருக்க வேண்டிய உபரி தொகை குறித்து முடிவு செய்ய நிபுணர் குழு ஒன்றை அமைக்க முடிவெடுக்கப்பட்டது. அதே சமயம் சிறுதொழில் நிறுவனங்களின் வராக் கடன் சீரமைப்பு குறித்த மத்திய அரசின் அறிவுறுத்தலை பரிசீலிக்க ரிசர்வ் வங்கி ஒப்புக்கொண்டது.

ரிசர்வ் வங்கி தன் கைவசம் 9 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உபரி தொகையை வைத்துக்கொண்டுள்ள நிலையில் இதை சர்வதேச நடைமுறைகளை அனுசரித்து குறைத்துக் கொள்ள மத்திய அரசு வலியுறுத்தி வந்தது. ஆனால் இதற்கு ரிசர்வ் வங்கி மறுத்ததால் மோதல் போக்கு நிலவி வந்தது. தற்போது இப்பிரச்னையில் முடிவெடுக்க நிபுணர் குழு அமைப்பதன் மூலம் தாற்காலிக சமரசம் ஏற்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close