[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

புயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் விசாரித்தார் பிரதமர்

spoke-to-the-chief-minister-of-tamil-nadu-edappadi-palaniswami-regarding-the-situation-arising-due-to-cyclone-conditions-in-the-state-pm-modi

கஜா புயல் பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமியிடம் தொலைபேசியில் பிரதமர் மோடி விசாரித்தார். 

வங்கக் கடலில் நிலை கொண்ட ‘கஜா’ புயல் இன்று அதிகாலை கரையை கடந்தது. எதிர்பார்க்கப்பட்ட நாகை, தஞ்சை, காரைக்கால் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் மட்டுமல்லாமல், திண்டுக்கல் உள்ளிட்ட உள்மாவட்டங்களிலும் புயலின் தாக்கம் இருந்தது. புயலின் தாக்கத்தினால் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

 

கஜா புயலால் உயிரிழந்தவர்களின்‌ குடும்பங்களுக்கு‌ தலா 1‌0 லட்சம் ரூபாய் நி‌தியுதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். படுகாயமடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சமும், சிறிய காயமடைந்தோருக்கு தலா ரூ.25,000 நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில், கஜா புயலினால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமியிடன் விசாரித்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டரில், “தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். புயல் பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். பாதிக்கப்பட்ட மக்கள் நலம் பெறவும், பாதுகாப்பாக இருக்கவும் பிரார்த்தனை செய்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close