[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS பேரவை தேர்தலில் பாஜக கூட்டணியே ஆட்சியமைக்கும் - பொன்.ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS டெல்லியில் மைக்ரோசாஃப்ட் இணை-நிறுவனர் பில்கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் சென்னையை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் – சீமான்
  • BREAKING-NEWS அதிசயம், அதிர்ஷ்டத்தை நம்புகிறவர் ரஜினி - அமைச்சர் ஜெயக்குமார்

சத்தீஸ்கரில் முதல்கட்ட தேர்தல்... காலையிலேயே மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

first-phase-elections-at-chattisgardh

சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருவதையொட்டி ஒரு லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நக்சல் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கர் மாநிலத்துக்கு இரு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதிகாலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்த மக்கள் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

Read Also -> மத்திய அமைச்சர் அனந்த குமார் காலமானார்

வாக்குப்பதிவின்போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக மத்திய துணை ராணுவப் படை, எல்லைப் பாதுகாப்புப் படை, இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை என சுமார் 65 ஆயிரம் வீரர்களும், சத்தீஸ்கர் மற்றும் பிற மாநில காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

Read Also -> குற்ற வழக்குகளை விளம்பரப்படுத்தாத வேட்பாளர்கள் மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையம் 

மேலும் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரா மற்றும் ஒடிசா எல்லையொட்டிய பகுதிகளிலும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Read Also -> “ எனது நண்பர் அனந்த் குமார் மறைவால் மிகவும் துயரம் அடைந்துள்ளேன்”- பிரதமர் மோடி இரங்கல்

முதல் கட்டத் தேர்தலில் 10 தொகுதிகளுக்கு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில் மாலை 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 8 தொகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close