[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

அடக்கம் செய்வதில் சிக்கல் ! ஒரு வாரமாக அல்லல்படும் முதியவரின் உடல்

as-kerala-church-factions-get-into-ugly-spat

கேரளாவில் முதியவரின் உடலை அடக்கம் செய்வதில் இரு கிறிஸ்துவ சர்ச் அமைப்புகளிடையே தகராறு ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கேரளாவில் கிறிஸ்துவ மதத்தின் ஜாகோபைட் அமைப்பை பின்பற்றும் 95 வயதான வர்கீஸ் மேத்யூ நவம்பர் 3ம் தேதி காலமானார். ஆனால் இதுவரை அவரது உடல் அடக்கம் செய்யப்படவில்லை. அவரது உடலை அடக்கம் செய்வதில் மலங்காரா ஆர்த்டாக்ஸ் சர்ச்சுக்கும், ஜாகோபைட் சிரியான் சர்ச்சுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வர்கீசின் உறவினர் அவரது இறுதி சடங்குகளை மலங்காரா ஆர்த்டாக்ஸ் சர்ச்சில் செய்ய வேண்டுமென்றும் இறுதி சடங்கை தங்கள் அமைப்பான ஜாகோபைட்டைச் சேர்ந்த ஒருவர் செய்ய வேண்டுமென்றும்  தெரிவித்து வருகின்றனர். ஆனால் இறுதி சடங்கை செய்வதற்காக ஜாகோபைட்டைச் சேர்ந்த ஒருவரை ஆர்தடாக்ஸ் சர்ச்சுக்குள் செய்ய அனுமதிக்க மாட்டோம் என ஆர்தடாக்ஸ் சர்ச்சை சேர்ந்தவர்கள் தெரிவித்து வருகின்றனர். இவர்களில் தகராறு காரணமாக  வர்கீசின் உடல் அடக்கம் செய்யப்படாமல் ஒரு வாரமாக அங்கும் இங்கும் கொண்டு செல்லப்படுகிறது.

ஆர்தடாக்ஸ் சர்ச்சின் செயலை கண்டித்து வர்கீசின் உறவினர்களும் அவரது ஆதரவாளர்களும் காயம்குளம் சாலையில் 10 மணி நேரத்திற்கும் மேலாக  போராட்டம் நடத்தினர். அதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் தொடரவே பிரச்னை பூதகரமானது. இதனையடுத்து அப்பகுதியில் 144 தடை விதித்து ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் உத்தவிட்டார். மேலும் கடந்த வெள்ளிக்கிழமை இரு தரப்பிடமும் பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளார். ஆனால் சுமூக முடிவு எட்டவில்லை.

இரண்டு சர்ச்சுகளுக்கு இடையேயான இந்த பிரச்னை பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. யாருக்கு உரிமை என்ற இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. 2017ம் ஆண்டு இந்த விவகாரத்தில் ஆர்த்டெக்ஸ் சர்ச்சுக்கே அனைத்துவிதமான உரிமைகளும் இருப்பதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இப்பிரச்னை குறித்து பேசிய வர்கீசின் பேரன் ஜார்ஜ் ஜான், நானும் எனது உறவினர்களும் தாத்தாவின் உடலை ஆர்த்டெக்ஸ் சர்ச்சுக்குள் அடக்கம் செய்யவே விரும்புகிறோம். இறுதி சடங்கிற்கான பணிகளை நான் செய்யவே எனது உறவினர்கள் விரும்புகின்ரனர். அது தான் இறந்து போன தாத்தாவின் விருப்பமும் கூட. ஆனால் அதற்கு ஆர்தடாக்ஸ் சர்ச்சை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். என்னை சர்ச்சுக்குள் அனுமதிக்க மறுக்கின்றனர் என்று தெரிவித்தார். 

இந்தப் பிரச்னையை மனித உரிமைகள் ஆணையம் வரை கொண்டு சென்றுள்ளார் ஜார்ஜ். அவரின் புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்டுள்ளது மனித உரிமைகள் ஆணையம்.

பிரச்னை குறித்து பேசிய ஆர்தடாக்ஸ் சர்ச்சை சேர்ந்தவர்கள், நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின்னரும் ஜாகோபைட்டைச் சேர்ந்தவர்களின் உடல்கள் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆனால் ஜாகோபைட்டைச் சேர்ந்த பாதிரியார்கள் இறுதி சடங்கை செய்ய அனுமதிக்க மாட்டோம். ஜாகோபைட்டைச் சேர்ந்த சிலர் பிரச்னை செய்வதற்காகவே இங்கு வருகின்றனர் என்று தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து தி நியூஸ் மினிட்டுக்கு பேசிய ஜாகோபைட்டைச் சேர்ந்தவர்கள், அவரவர்களின் இறுதி சடங்கு குறித்து முடிவு செய்வதற்கு எல்லாருக்கும் உரிமை உள்ளது. ஒவ்வொருவரின் இறுதி சடங்கும் அவரவர்களின் ஆசைப்படியே செய்துவைக்கப்படுகிறது. இறுதி சடங்கை எதிர்த்து நிற்பது சட்டத்துக்கு எதிரானது. பிரச்னையை உண்டு பன்னவே ஆர்த்டெக்ஸ்  அமைப்பை சேர்ந்தவர்கள் விரும்புகிறார்கள் என்று தெரிவித்தார். எங்களது அங்கிகளை அணிந்து வராமல் உள்ளே வரலாம் என ஆர்தடாத்சை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். எங்களது நம்பிக்கையை நசுக்கி எப்படி எங்களால் நடந்துகொள்ள முடியும் என்றும்  ஜாகோபைட்டைச் சேர்ந்தவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close