[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

ஆக்ராவுக்கு புதுப்பெயரா ? பரபரப்பை கிளப்பிய பாஜக எம்.எல்.ஏ

rename-agra-as-agravan-demands-bjp-mla

தாஜ்மஹால் அமைந்துள்ள ஆக்ராவின் பெயரை அக்ரவான் என் பெயர் மாற்றம் செய்யப்பட்ட வேண்டுமென்று ஆக்ராவின் வடக்குப்பகுதியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்துள்ளார்

இந்தியாவின் கட்டடக்கலைக்கு சான்றாக விளங்கும் காதல் சின்னம் தாஜ்மஹால். உலக அதிசயங்களில் ஒன்றான இது ஆக்ராவில் இருக்கிறது. பாரம்பரிய சின்னமாக இதை யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் 80 லட்சத்துக்கும் அதிகமானோர் தாஜ்மஹாலைப் பார்க்க வருகின்றனர். 

இந்நிலையில் தாஜ்மஹால் அமைந்துள்ள ஆக்ராவின் பெயரை அக்ரவான் என் பெயர் மாற்றம் செய்யப்பட்ட வேண்டுமென்று ஆக்ராவின் வடக்குப்பகுதியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பிரசாத், பெயர் மாற்றம் குறித்து உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அரசர் அக்ரசனை பின் தொடர்பவர்கள் பலர் தற்போதைய ஆக்ராவில் வசித்து வருகின்றனர். வான் என்றால் காடு என்பதை குறிக்கிறது. ஆக்ராவும் காடுகளால் நிரம்பியிருக்கிறது. அதனால் ஆக்ராவின் பெயரை அக்ரவான் என பெயர் மாற்றம் செய்வது சரியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தற்போது உள்ள பெயரான ஆக்ரா என்பது அக்பர்பாத் என்ற பெயரில் இருந்து வந்தது என்றும் அதில் அர்த்தமொன்றும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆக்ராவின் பெயர் மாற்றம் குறித்து பேசுவதற்கு தன் விரைவில் முதலமைச்சர் யோகியை சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தீபாவளியையொட்டி சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய யோகி ஆதித்யாநாத், அயோத்தி நகரம் அமைந்துள்ள ஃபைஸாபாத் மாவட்டத்துக்கு அயோத்தி மாவட்டம் என பெயர் சூட்டப்படும் என தெரிவித்தார். அதேபோல் தெலங்கானா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் ஹைதராபாத்தின் பெயர் ‘பாக்யாநகர்’ என பெயர்மாற்றம் செய்யப்படும் என  பாஜக எம்எல்ஏ ராஜா சிங் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close