[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

கர்ப்பிணிப் பெண் கொலை - சாதிப் பிரச்னை காரணமா ?

22-yr-old-pregnant-woman-stabbed-to-death-in-karnataka-caste-killing-suspected

கர்நாடகாவில் 22 வயது கர்ப்பிணிப் பெண் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. 

கர்நாடகா விஜயபுரா மாவட்டம் யல்கர் கிராமத்தில் 22 வயது கர்ப்பிணிப் பெண் தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலிசாருக்கு தகவல் கிடைத்தது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில், இறந்த பெண்ணின் பெண்ணின் பெயர் ரேணுகா சகரப்பா நாயக் என்பது தெரியவந்துள்ளது. ரேணுகா வேறு சாதியினரை திருமணம் செய்து கொண்டது பிடிக்காமல் அவரது தாயார் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதுகுறித்து ரேணுகாவின் கணவர் சகரப்பா நாயக் தெரிவித்ததாவது: ”ரேணுகாவும் நானும் ரைச்சூர் மாவட்டம் சிறவர் நகரத்தில் வசித்து வந்தோம். இரண்டு வருடத்திற்கு முன்பு கல்லூரி படிப்பு படிக்கும்போது சந்தித்து காதலித்தோம். நானும் ரேணுகாவும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் ரேணுகாவின் தாயார் மரிவா எங்கள் காதலுக்கு சம்மதிக்கவில்லை. இதனால் நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டோம். அதன்பின்னர், விஜயபுரா மாவட்டம் யல்கர் கிராமத்தில் தஞ்சம் அடைந்தோம். 

திருமணமான நாள் முதல் மரிவா, ரேணுகாவிடம் சகரப்பாவை விட்டு வந்துவிடு இல்லையென்றால் உன்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டி வந்தார். ஆனால் ரேணுகா அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தார். நான் சொந்தமாக மொபைல் விற்பனை கடை வைத்துள்ளேன். சந்தோஷமாகத்தான் வாழ்ந்து வந்தோம். 

ஒரு நாள் ரேணுகா தனது தாயாரை சந்தித்து சமாதானப்படுத்த வேண்டும் என என்னிடம் தெரிவித்தார். ஆனால் மரிவா அடிக்கடி என்னிடம் எங்களை கொலை செய்து விடுவேன் என மிரட்டி வந்தார். அதை நாங்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. 

நான்கு மாதங்களுக்கு முன்னால், ரேணுகா தான் கர்பமான விஷயத்தை சொன்னால் தனது பெற்றோர் தனது பேரக்குழந்தைக்காக நம் திருமணத்தை ஏற்றுக்கொள்வார்கள் என தெரிவித்தார். அதன்படி அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர், சில நாட்களுக்கு பிறகு மரிவா ரேணுகாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது தீபாவளிக்கு வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.  

இதையடுத்து சில வாரங்களுக்கு முன்பு ரேணுகாவின் தாயார் மரிவா, அண்ணன் மல்லிகார்ஜுன் பூஜாரி, மாமா ரமேஷ் ஆகியோர் எங்களை சந்திக்க வந்தனர். அப்போது, மரிவா அனைவரும் பழைய விஷயங்களை மறந்து எதிர்காலத்தை பற்றி சிந்திப்போம் என எங்களிடம் கூறினார். அது எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. 

மேலும் இனிப்புகள் வாங்கி வந்த மரிவா நாம் அனைவரும் தீபாவளியை இங்கேயே கொண்டாடுவோம் என கூறினார். தீபாவளி அன்று இரவு நான் கடைக்கு சென்றுவிட்டேன். அப்போது, ரேணுகா வீட்டில் இறந்து கிடப்பதாக அக்கம்பக்கத்தினரிடம் இருந்து எனக்கு செல்போனில் தகவல் வந்தது. வீட்டில் வந்து பார்த்தபோது ரேணுகா இறந்து கிடந்தாள்”. இவ்வாறு தெரிவித்தார். 

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், சாதிப் பிரச்னை காரணமாக பெண்ணின் தாயார் மரிவா, அண்ணன் மல்லிகார்ஜுன் பூஜாரி, மாமா ரமெஷ் ஆகியோர் ரேணுகாவை கொலை செய்திருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் விசாரணை நடைபெற்று வருவருவதாகவும் அவர்கள் மேல் ஐபிசி 302-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் தலைமறைவாக உள்ளதால் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close