[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

நவம்பர் 8.. இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நாள்..!

demonetisation-day-november-8

இந்த நாளையும், பிரதமர் மோடியின் அறிவிப்பையும் அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட மாட்டார்கள். நவம்பர் 8. பண மதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டு இன்றோடு இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. கடந்த 2016-ஆம் ஆண்டு பிரதமர் மோடி இதே நாளில்தான் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதாவது நாட்டில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த அவர் புதிய ரூபாய் நோட்டுகள் விரைவில் அமல்படுத்தப்படும் எனவும் கூறினார்.

அத்துடன் செல்லாததாக அறிவிக்கப்பட்ட நோட்டுகளை டிசம்பர் 30, 2016 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் அலுவலகங்கள் அல்லது வங்கிக் கிளைகளில் ஒப்படைத்து, அவரவருக்குரிய வங்கிக் கணக்கில் வரவு வைக்க இயலும். வாரத்திற்கு அதிகபட்சமாக 20,000 ரூபாய் மட்டுமே வங்கிக் கணக்கிலிருந்து பணம் பெற இயலும். உடனடியாக பணம் தேவையெனில், 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒப்படைத்து ஒரு ஆளுக்கு 4000 ரூபாய் என்ற வகையில் புதிய நோட்டுகளை வங்கிக் கிளைகளில் பெற்றுக் கொள்ளலாம். நள்ளிரவு முதல் அனைத்து ஏடிஎம் இயந்திரங்களும் இயங்காது என பல அதிர்ச்சிக்குரிய அறிவிப்புகளை வெளியிட்டார். கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு சில மணி நேரங்களில் பட்டி தொட்டியெங்கும் பரவியது. கிராம மக்கள் முதல் சிட்டியில் இருப்பவர்கள் என அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

ஏடிஎம்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். ஆனால் ஏடிஎம்கள் இயங்கவில்லை. எந்த முன் அறிவிப்புமின்றி இந்த அறிவிப்பு வெளியானதால் மக்கள் கைகளில் பணம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டனர். அடுத்த நாள் தேவைக்கு ஏடிஎம்களில் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்ற நினைத்தவர்களெல்லாம் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகினர். வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

100 ரூபாய் மட்டுமே செல்லும் நோட்டாக இருந்ததால் அந்த நோட்டிற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் மணிக்கணக்கில் காத்திருந்தவர்களில் சிலர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. மருந்து வாங்க பணம் இல்லாமல், திருமணத்தை திட்டமிட்டப்படி நடத்த முடியாமல், சுற்றுலா சென்றவர்கள் விரும்பிய பொருட்களை வாங்க முடியாமல் என அனைத்து மக்களும் பணத் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டனர். வங்கிக் கணக்கில் லட்சக்கணக்கில் பணம் இருந்தும் அதனை அத்யாவசிய தேவைக்கு பயன்படுத்த முடியவில்லையே என பலர் புலம்பினர். எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் என பலரும் பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை கடுமையாக விமர்சித்தனர். சிலர் பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்தனர்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தொழில் நிறுவனங்கள் முடங்கின. வளர்ச்சி குறைந்தது. அனைத்து துறைகளிலும் நிலவிய பணத் தட்டுப்பாடு மெல்ல மெல்ல சீராக கிட்டத்தட்ட 6 மாதத்திற்கும் மேலாகி இருந்தது. இதனால் ஏற்பட்ட தவிப்புகளையும், உயிரிழப்புகளையும் மக்கள் இன்றுவரை சொல்லி வருகின்றனர்.

கருப்புப் பணத்தை ஒழிக்கத்தான் பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளில் 99.3% மீண்டும் வங்கிகளுக்கே திரும்பிவிட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படியிருக்க பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் என்ன பயன் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். முதலில் பண மதிப்பிழப்பிற்கு ஆதரவு தெரிவித்தவர்கள் கூட பின்னர் அதனை வாபஸ் பெற்றுக் கொண்டனர். எவ்வாறாயினும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நாள் என்பதில் ஐயமில்லை.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close