[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

அயோத்தி இளவரசி சூரிரத்னாவுக்கு நினைவகம்!

ceremony-for-queen-suriratna-memorial-in-ayodhya

கொரிய நாட்டு மன்னரை திருமணம் செய்த அயோத்தி இளவரசிக்கு உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் நினைவகம்
திறக்கப்பட்டது. 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 4-ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் தீப உற்சவம்
நடைபெற்றது. இந்த உற்சவ விழாவில் உத்திரப்பிரதேச ஆளுநர் ராம் நாயக், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இந்த கொண்டாட்டத்தில் முக்கிய விருந்தினராக தென்கொரிய அதிபர் மூன் ஜேன் இன் மனைவி கிம் ஜங்-சூக் பங்கேற்றார். அவர் இன்று நடைபெற்ற பிரமாண்ட தீப உற்சவத்தில் பங்கேற்று அயோத்தி இளவரசிக்கு அமைக்கப்பட்ட நினைவிடத்தை திறந்து வைத்தார்.

அயோத்தி இளவரசியான சூரிரத்னா கி.பி. 48ஆம் ஆண்டுகணக்கில் கொரியாவுக்கு சென்று அங்குள்ள ஒரு சமஸ்தானத்தின் மன்னரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவர் இளவரசி ஹர் ஹூவாங் ஓக் என அழைக்கப்பட்ட நிலையில், வரலாற்று குறிப்புகளில் அவரது பெயர் ஹூ என உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த வரலாற்றை நினைவுகூறும் வகையில் தென்கொரியா அரசின் ஒத்துழைப்புடன் அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில்
இளவரசி ஹு-வுக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. அங்கு தென்கொரியா மற்றும் இந்திய கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நினைவிடத்தை தென்கொரிய அதிபரின் மனைவி கிம் ஜங் சூக், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் திறந்து வைத்தனர். 

திறப்பு விழாவின்போது இந்தியா மற்றும் தென்கொரியா நாட்டு கலைக்குழுவினர் நடத்திய கலை நிகழ்ச்சியை யோகி  ஆதித்யாநாத் மற்றும் கிம் ஜங்-சூக் உள்ளிட்டோர் கண்டு களித்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close