[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு

சபரிமலையில் பெண் பக்தைக்கு எதிராக போராட்டம் - 150 பேர் மீது வழக்குப்பதிவு

woman-over-50-years-harassed-for-visiting-sabarimala-150-persons-booked

சபரிமலையில் பெண் பக்தைக்கு எதிராக போராட்டம் நடத்திய 150 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் அண்மையில் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதனால் மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது. ஆகவே அப்பகுதிகளில் ஏராளமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 

உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து ரெஹானா பாத்திமா என்ற பெண் பத்திரிகையாளரும் கவிதா என்ற மற்றொரு பெண்ணும் இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலை கோயிலுக்குள் செல்ல முயன்றனர். அப்போது எதிர்ப்பு வலுக்கவே சன்னிதானம் வரை சென்று மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனிடையே இந்து அமைப்புகளின் போராட்டம் முற்றியதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று நடை திறக்கப்பட்ட நிலையில், பம்பை, நிலக்கல், சன்னிதானம் மற்றும் இலவுங்கல் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் இன்று நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

50 வயதிற்கு கீழ் உள்ள பெண்கள் சபரிமலை வருவதற்கு இந்து அமைப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை திரிச்சூரில் இருந்து லலிதா என்ற 52 வயது பெண்மணி சபரிமலைக்கு வந்தார். அங்கிருந்த போலீசார் அருகில் இருந்த கட்டடத்திற்கு அழைத்துச் சென்று லலிதாவின் ஆவணங்களை சரிப்பார்த்து உறுதி செய்தனர். 

ஆனால் லலிதா 50 வயதிற்கு கீழ் உள்ளவர் எனக்கூறி இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத 150 பேர் மீது 143, 144, 341, 308, 354, 149 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு நடுவில் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் ஒருவரை தாக்கி அவரது கேமராவையும் உடைத்துள்ளனர். 

இதையடுத்து சிலமணிநேரத்திற்கு பிறகு லலிதா சன்னிதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close