[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS குஜராத்: அகமதாபாத்தில் வல்லபாய் படேல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு

சபரிமலை சன்னிதான பாதுகாப்பு பணியில் முதன்முதலாக 15 பெண் போலீசார்  

in-a-first-15-women-cops-deployed-at-sabarimala-sannidhanam

சபரிமலை சன்னிதானத்தில் முதன்முதலாக 50 வயதிற்கு மேற்பட்ட 15 பெண் போலீசார் பாதுகாப்புக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர். 

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் அண்மையில் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதனால் மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது. ஆகவே அப்பகுதிகளில் ஏராளமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 

உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து ரெஹானா பாத்திமா என்ற பெண் பத்திரிகையாளரும் கவிதா என்ற மற்றொரு பெண்ணும் இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலை கோயிலுக்குள் செல்ல முயன்றனர்.

அப்போது எதிர்ப்பு வலுக்கவே சன்னிதானம் வரை சென்று மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனிடையே இந்து அமைப்புகளின் போராட்டம் முற்றியதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

இதைத்தொடர்ந்து ஐப்பசி மாத பூஜை நிறைவடைந்ததையடுத்து சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை மூடப்பட்டது. இந்நிலையில் மண்டல பூஜைக்காக மீண்டும் இன்று நடை திறக்கப்பட்டது. இதனால் பம்பை, நிலக்கல், சன்னிதானம் மற்றும் இலவுங்கல் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் இன்று நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே விஸ்வ இந்து பரிஷத் மற்றும் இந்து ஐக்யவேதி உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகளின் கூட்டுத் தளமான சபரிமலை கர்மா சமிதி பத்திரிகை நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில், சபரிமலை நடைத் திறப்பின்போது செய்தி சேகரிக்க பெண் பத்திரிகையாளர்களை அனுப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டது.  

இந்நிலையில் சபரிமலை சன்னிதானத்தில் முதன்முதலில் 50 வயதிற்கு மேற்பட்ட 15 பெண் போலீசார் பாதுகாப்புக்காக பணியமர்த்தி பத்தனம்திட்ட டிஎஸ்பி சந்தோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து கேரளா போலீஸ் கூறுகையில், 
அக்டோபர் மாதம் நடந்த வன்முறைகளுக்குப் பிறகு, பெண் போலீசாருக்கு அதிகாரத்தை வழங்குவதில் இந்து அமைப்புகளுக்கு விருப்பமில்லை எனவும் ஆயினும், பெண் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக 50 வயதிற்கு மேலான 15 பெண் போலீசாரை பணியமர்த்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close