[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்
  • BREAKING-NEWS உள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
  • BREAKING-NEWS சர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் - தமிழக அரசு
  • BREAKING-NEWS தூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்

டெல்லி மக்களுக்கு தீபாவளி பரிசாக சிக்னேச்சர் பாலம்..!

diwali-gift-to-delhiites-signature-brige

டெல்லியில் பொதுமக்களின் நலனுக்காக சிக்னேச்சர் பாலத்தை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று திறந்து வைத்தார். இன்று முதல் பாலம் மக்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளது. நீண்ட நாட்கள் மக்கள் இந்த பாலத்திற்காக காத்திருந்த நிலையில் தீபாவளியையொட்டி இந்த பாலம் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.

* 675 மீட்டர் நீளமுள்ள இப்பாலம் மூலம் வட மற்றும் வடமேற்கு டெல்லிக்கு இடையிலான போக்குவரத்து நேரம் முன்பை விட குறையும். அதுமட்டுமில்லாமல் வஜிராபாத் பாலத்தை பயன்படுத்தியவர்கள் இனி சிக்னேச்சர் பாலத்தையும் பயன்படுத்தலாம். இதனால் வஜிராபாத் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும்

* நர்மதா நதியின் குறுக்கே இப்பாலம் கட்டப்பட்டுள்ளது.

* கிட்டத்தட்ட 1500 கோடி ரூபாய் செலவில் 15 வருட உழைப்பிற்கு பின் இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

* வஜிராபாத் சாலை மற்றும் கர்னல் பைபாஸ் சாலையை இணைக்க இப்பாலம் உதவுகிறது.

* கடந்த 2004-ஆம் ஆண்டு அப்போதைய டெல்லி முதலமைச்சர் ஷீலா தீக்சித் இத்திட்டத்தை இறுதி செய்த நிலையில் 2007-ஆம் ஆண்டு டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 1131 கோடி ரூபாய் செலவில் 2015-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டிற்கு முன்னதாக இந்த திட்டத்தை முடிக்க முதலில் முடிவு செய்யப்பட்டது. பல்வேறு தடைகளுக்கு பின் தற்போது 1594 கோடி ரூபாய் செலவில் திட்டம் முடிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close