[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

நீதிபதிகளுக்கான மொத்த பதவிகளும் நிரம்பினால் கூடுதலாக 4000 அறைகள் தேவை..!

shortage-of-4000-court-rooms-in-courts

அனைத்து நீதிபதிகளுக்கான காலி பணியிடங்களும் நிரப்பப்படும் பட்சத்தில் நீதிமன்றங்களில் கூடுதலாக 4000 அறைகள் தேவைப்படும் என தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் தற்போது மாவட்ட நீதிமன்றங்கள் உள்பட 18,400 நீதிமன்றங்கள் உள்ளன. இங்குள்ள அனைத்து நீதிபதிகளுக்கான பதவிகளும் நிரப்பப்படும் பட்சத்தில் நீதிமன்றங்களில் கூடுதலாக இன்னும் 4000 அறைகள் தேவைப்படும் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து நடப்பாண்டில் 2730 நீதிமன்ற ஹால்களை கட்டி முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அத்தோடு மட்டுமின்றி நீதித்துறையில் காலியாக உள்ள 5700-க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மொத்தமாக 22,474 நீதிபதிகள் பணியாற்ற ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 16,728 நீதிபதிகளே பணியாற்றி வருகின்றனர்.

நீதித்துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்பும் விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் மற்றும் மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்திருந்தார். அத்துடன் குறிப்பிட்ட நேரத்திற்குள் காலியாக உள்ள இடங்களுக்கு உரிய ஆட்கள் நிரப்பப்பட வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் கீழ் நீதிமன்றங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான முயற்சி உத்வேகம் அடைந்துள்ளது. கீழ் நீதிமன்றங்களில் தற்போது 2.72 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீதிபதிகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

இதனிடையே நீதிமன்றங்களில் கூடுதலாக ஹால்கள் அமைக்க தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக சட்ட அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close