[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

“இந்திய மண்ணில் தோனி இல்லாத முதல் டி20” - வருத்தத்தில் ரசிகர்கள்

for-the-first-time-in-their-t20i-history-india-will-be-playing-a-home-t20i-without-ms-dhoni

டி20 போட்டிகள் வரலாற்றில் தோனி இல்லாத ஒரு டி20 போட்டியை இந்தியாவில் இந்திய அணி இன்று விளையாடுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த பயணத்தில் ஏற்கெனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய தொடர்களை இந்திய அணி வென்றுள்ளது. இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று முதல் ஆரம்பிக்கிறது. கொல்காத்தாவில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இன்றைய இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி மற்றும் முன்னாள் கேப்டன் தோனி ஆகியோர் இடம்பெறவில்லை. 

இதுவரை டி20 வரலாற்றில் தோனி இல்லாமல் இந்திய மண்ணில் ஒருமுறை கூட இந்திய அணி விளையாடியதில்லை. டி20 வரலாற்றில் உலக கோப்பை இந்திய அணிக்கு வென்று கொடுத்தவர் அப்போதைய கேப்டன் தோனி. இவருக்கென கிரிக்கெட் உலகில் தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இந்நிலையில் அண்மைக்காலமாக தோனி ஆட்டத்தில் மந்தத்தன்மை நிலவுவதால், அவரது ரசிகர்கள் கவலையிலும், மற்ற கிரிக்கெட் பார்வையாளர்கள் தோனி மீது விமர்சனத்தையும் முன் வைத்து வருகின்றனர்.


 
இந்நிலையில் இன்றைய டி20 போட்டியில் தோனி நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளார். இளம் வீரருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கருத்து கிரிக்கெட் உலகில் கூறப்பட்டாலும், தோனி இல்லாதது அவரது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close