[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

கர்நாடகாவில் இன்று இடைத்தேர்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது

karnataka-by-elections-voting-begins

கர்நாடகாவில் இன்று நடக்கும் இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது.

கர்நாடகாவில் சிவமொக்கா, பல்லாரி, மண்டியா ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளும், ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளும் காலியாக இருந்தன. இந்த 5 தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததிருந்தது. அதன்படி இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. பல்லாரி, ஜமகண்டி ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரஸும்ம், மண்டியா, சிவமொக்கா, ராமநகர் தொகுதிகளில் ஜனதா தளம்(எஸ்) கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

(சித்தராமையா, எடியூரப்பா, குமாரசாமி)

பா.ஜனதா சார்பில் 5 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். சிவமொக்கா தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் முன்னாள் முதலமைச்சர் பங்காரப்பாவின் மகன் மது பங்காரப்பா, பா.ஜ.க சார்பில் எடியூரப்பா மகன் ராகவேந்திரா போட்டியிடுகின்றனர். இதனால் இந்த தொகுதியில் யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

(அனிதா குமாரசாமி)

ராமநகரா தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் முதலமைச்சர் குமாரசாமி மனைவி அனிதாவும் பா.ஜ.க சார்பில் காங்கிரஸில் இருந்து வெளியேறிய சந்திரசேகரும் போட்டியிட்டனர். இந்நிலையில் சந்திரசேகர், திடீரென பா.ஜ.கவில் இருந்து விலகி நேற்றுமுன் தினம் காங்கிரஸின் ஐக்கியமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இந்த 5 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இந்த இடைத்தேர்தலுக்காக 5 தொகுதிகளிலும் மொத்தம் 6,453 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்குச்சாவடிகள் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. 5 தொகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close