[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.
  • BREAKING-NEWS 2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS 2021 ஆம் ஆண்டில் அதிமுவை சேர்ந்த ஒருவரே முதல்வராக இருப்பார் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணியே உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர்கிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS 2021ம் ஆண்டு அரசியலில் தமிழ் மக்கள் மிகப் பெரிய அதிசயத்தை, அற்புதத்தை நூற்றுக்கு நூறு சதவீதம் நிகழ்த்துவார்கள் - ரஜினிகாந்த்

நடு இரவில் அரைகுறை ஆடையில் போலீஸுடன் கைகலப்பில் ஈடுபட்ட மாடல்: நடந்தது என்ன? 

model-removes-clothes-in-front-of-cops-in-argument

சிகரெட்ஸ் கேட்டு அரைகுறை ஆடையுடன் ரகளை செய்த மும்பை மாடல் ஒருவர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறார். 

மும்பையை சேர்ந்தவர் மேகா சர்மா. இவர் ஒரு மாடல். மும்பையின் முக்கியமான பகுதியிலுள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். மிக சாதாரணமான மாடலான இவர் இன்று மும்பை ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகி இருக்கிறார். காரணம் அவர் குறித்து சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ. அந்த வீடியோ வெளியான சற்று நேரத்திற்குள் அவர் வைரலானார். காரணம்; அந்த வீடியோவில் அவர் இருந்த விதம். அரைகுறையாக ஆடைகளை கழற்றி போட்டபடி அவர் செய்த ஆர்ப்பாட்டம் அந்தளவுக்கு அவரை வைரலாக்கியது.

முதலில் அவர் குறித்து வெளியான வீடியோவை பற்றி எந்தத் தகவலும் இல்லை. அவரை சுற்றி இரண்டு போலீஸ்கள் நிற்க கூடவே ஒருசில செக்யூரிட்டிகள் இருக்க, அவர் மட்டும் அரைகுறையான குளியல் உடையில் கதறிக் கொண்டிருந்தார். அவர் சத்தம் போடுவதை பார்த்த சமூக வலைத்தளவாசிகள் அவருக்கு என்னமோ ஏதோ என்று வைரல் செய்தனர். அவருடன் மும்பை போலீஸ் இருக்கும் போதே அவர் ஏன் அரை நிர்வாணமாக இருக்கிறார். அவரது உடைகளை கழற்றியவர்கள் யார்? அவருக்கு என்ன நடந்தது என்பதை பற்றி அறிந்துக் கொள்வது பற்றி பதறிக் கொண்டிருந்தனர். 

முதல் வீடியோ பற்றியே ஒன்றும் தெரியாத போது அடுத்து இரண்டாவது வீடியோ ஒன்று வெளியானது. அதில் மேகா சர்மா, அவர் குடியிருப்பின் வரவேற்பறையில் ஒரு செக்யூரிட்டி உடன் சண்டை இடுகிறார். அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டுள்ள போதே மேகா, அந்த செக்யூரிட்டியை கன்னத்தில் அறைகிறார். அதன் மூலம் சண்டை வலுக்கிறது. இருவரும் சண்டையிட்டபடி தெருவுக்கு செல்கிறார்கள். அங்கே இருவர் வந்து அவர்களை சமாதானம் செய்கிறார்கள். ஆனாலும் மேகா ஆக்ரோஷமாக சண்டையிடுகிறார். அந்த வீடியோவின் பின்புலம் என்ன என்பது குறித்தும் எந்த விவரங்களும் வெளியாகவில்லை. அதன் பிறகு இன்னொரு வீடியோவில் அவரது வீட்டு லிப்டில் காவல்துறையினர் முன் அவர் தனது உடைகளை கலைத்துப் போட்டு ரகளையில் ஈடுபடுகிறார். அந்த வீடியோவில் உள்ள மும்பை காவலர்கள் செய்வதறியாது தவிப்பதும் பதிவாகி இருந்தது.

இந்நிலையில் மேகா இந்தச் சண்டை குறித்து இப்போது விளக்கம் அளித்துள்ளார். டைம்ஸ் ஆப்ஃ இந்தியா மற்றும் வடமாநில ஊடங்களுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். வீட்டில் தான் தனியாக இருந்ததாகவும், அப்போது தனக்கு சில சிகரெட்ஸ் தேவை பட்டதாகவும் அதை வாங்கி வர சொல்லி இண்டர்காமில் செக்யூரிட்டியை கேட்டதாகவும் அப்போது அந்தக் காவலர் முடியாது என்று மறுத்ததோடு அநாகரிகமாக பேசியதாகவும் அதற்காவே அவரை அடித்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

நான் குடியிருக்கும் வீட்டில் பல செக்யூரிட்டிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒருவர் கூட நான் கேட்ட சிகரெட்டை வாங்கி தரவில்லை. இரவு ஒரு மணிக்கு ஒரு பெண் தனியாக வெளியே செல்ல முடியுமா? நான் அப்போது கொஞ்சம் மது அருந்தி வேறு இருந்தேன். அப்படி இருக்கையில் எப்படி போக முடியும் என்று கூறியுள்ளார்.

மேலும் சண்டை நடந்த போது காவல்துறையினர் வந்து புகார் அளிக்க காவல்நிலையம் வர சொன்னார்கள். அப்போது வந்த இரு காவலர்களும் ஆண்கள். அவர்களை நம்பி நடு ராத்திரியில் எப்படி போக முடியும். பெண் காவலர்கள் வந்தால் வருகிறேன் என்றேன். அல்லது காலையில் புகார் அளிக்கிறேன் என்றேன். ஆனால் அவர்கள் செல்லவில்லை. ஆகவே உடைகளை கழற்றி போட்டு சர்ச்சை செய்தேன் என்று விளக்கம் அளித்துள்ளார் மேகா. 

பெண் ஒருவர் பலர் குடியிருக்கும் அடுக்கு மாடி கட்டடத்தில் இப்படி அரைகுறை ஆடையோடு சர்ச்சையில் ஈடுபட்டதும் இல்லாமல் சிகரெட் கேட்டு ரகளை செய்தது இப்போதுதான் சமூக வலைத்தளவாசிகளின் கவனத்திற்கு வந்துள்ளது. ஆகவே முதலில் மேகாவை ஆதரித்த அவர்கள் இப்போது அவரை விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.  

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close