[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

“கூகுள் நிறுவனத்தில் பாலியல் தொல்லை” - ஊழியர்கள் வேலை நிறுத்தம்

google-employees-walk-out-protest-to-me-too-of-women

பெண் ஊழியர்களை கூகுள் நிறுவனம் தரக்குறைவாக நடத்துவதாக கூறி உலகெங்கும் உள்ள அந்நிறுவன ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

சிறிய நகரத்தில் தொடங்கி உலக நாடுகள் வரை மீ டூ பிரச்சாரம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சிறியது, பெரியது என்ற வித்தியாசமின்றி அனைத்து நிறுவனங்களிலும் மீ டூ எதிரொலித்து வருகிறது. இதில் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் நடிகைகள் மற்றும் இசைக்கலைஞர்கள் பலரும் தங்களது வாழ்வில் நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். பணியிடங்களிலும், பொது இடங்களிலும் நடக்கும் பாலியல் தொல்லைகளை #metoo என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைத்தளங்களில் பெண்கள் பலர் பதிவிட்டு வருகின்றனர். 

இதனிடையே கூகுள் நிறுவனத்திலும் அண்மை காலமாக பெண்களுக்கு எதிராக பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கூகுளின் ஆண்ட்ராய்ட் ஜாம்பவானாக திகழ்ந்த ஆண்டி ரூபன், அவரது உதவியாளர் ஒருவரிடம் தவறான முறையில் நடந்துக் கொண்டதாக கடந்த 2014 ஆம் ஆண்டு பணியில் இருந்து அனுப்பியதாக லாரி பேஜ் தெரிவித்தார். மேலும் கடந்த 2 ஆண்டுகளில் பாலியல் புகாரில் சிக்கிய 48 பேரை கூகுள் நிறுவனம் பணியில்‌ இருந்து நீக்கியுள்ளதாக, தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கூறினார். அவர்களில் 13 பேர் மூத்த அதிகாரிகள் எனவும் கூறப்பட்டது. 

இந்நிலையில் பாலியல் புகார்களை சிறப்பாக கையாள வலியுறுத்தியும், பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியும் கூகுள் நிறுவன ஊழியர்‌கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் ஐதராபாத், மும்பை, பெங்களூரூ ஆகிய இடங்களில் உள்ள கூகுள் அலுவலகங்களில் பணிபுரியும் 2 ஆயிரம் ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். கூகுள் வாக் அவுட் என்ற பெயரில் இப்போராட்ட‌ம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் பெண் ஊழியர்கள் கூறிய பாலியல் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை, உயர் அதிகாரிகளுக்கு சாதகமான நிலைப்பாடு, பணி வாய்ப்பு மற்றும் ஊதியத்தில் சமநிலையின்மை உள்ளிட்ட பிரச்னைகளை‌   ஊழியர்கள் எழுப்பினர். இதற்கு பதிலளித்துள்ள சுந்தர் பிச்சை ஊழியர்களின் ஆவேசம் மற்றும் ஏமாற்றங்களை உணர்ந்து  கொள்ள முடிகிறது என்றும், இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close